விலைபோகும் தமிழ் அரசியல்

January 12, 2018 at 5:51 pm

 

( வீ.ராம்ராஜ் )

தற்போது உள்ளுராட்சித் தேர்தல்களுக்கான பிரச்சாரம் ஆரம்பித்துள்ள வேளையில் தமிழ்க் கட்சிகளிடையே பாரியபிளவுகளும் ஏற்பட்டுள்ளன. இதற்குப் பிரதான காரணம் sumanthiranMPதமிழரசுக் கட்சியேஎன இதர கூட்டமைப்புக் கட்சிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றன. ரெலோஅமைப்பினர் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக அறிக்கை விடுத்தனர். ஈபி ஆர் எல் எவ் அணியினர் வெளியேறினர். புளொட் அமைப்பினர் தருணத்தை எதிர்பார்த்துமௌனமாக உள்ளனர். ரெலோஅணியினர் கேட்டது கிடைத்ததாகக் கூறிப் பின்னர்பின்வாங்கினர்.

தற்போது தமிழரசுக் கட்சிக்குஎதிரான அணியாகவே சகலரும் உள்ளனர். கூட்டமைப்பிற்குள் உள்ள இதரகட்சிகள் தமிழரசுக் கட்சிக்கு வாக்குச் சேகரிக்கச் செல்வார்களா? என்பதுபெரும் சந்தேகமே. அவ்வளவிற்குக் கசப்புஅதிகரித்துள்ளது. இதற்கிடையில் தமிழரசுக் கட்சிக்குள் நியமனப் பத்திரம் தாக்கல் செய்வதில் ஏற்பட்டஅடிபிடிகள், முக்கியதலைவர்களை நோக்கிய அவமானப்படுத்தல்கள் எனகதை நீண்டுசெல்கிறது.

இப் பின்னணியில் தமிழரசுக் கட்சியின் முக்கியபேச்சாளரான சுமந்திரன் ( பா உ) அவர்கள் எதிர்வரும் ஜனவரி 19ம் திகதி லண்டனில் உரையாற்றவுள்ளதாகவும், அவரதுஉரையைச் செவிமடுப்பதாயின் 50 பிரித்தானிய ஸ்ரேர்லிங் பவுண்கள் வழங்கப்படவேண்டுமென அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

புதியஅரசியல் யாப்பில் சமஷ்டிக்கான எந்தவாய்ப்புகளும் இல்லை என முன்னாள் கூட்டமைப்பின் பேச்சாளரும், ஈழ மக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் மற்றும் தமிழ் மக்கள் தேசியமுன்னணித் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கூட்டமைப்பை நோக்கிச் சவால் விடுகின்றனர். தேர்தல் கூட்டங்களில் சிங்கள அரசியல் கட்சித் தலைவர்கள் குறிப்பாக ஐதேகட்சி முக்கியஸ்தர்கள் புதியயாப்பு ஒற்றைஆட்சியே என அடித்துக் கூறுகின்றனர்.

பிரிக்கப்படாத, பிரிக்கமுடியாத ஐக்கிய இலங்கை என ஏற்றுக் கொள்ளும் கூட்டமைப்பினர் அல்லது தமிழரசுக் கட்சியினர் பதிலுக்கு என்ன தீர்வைப் பெற்றார்கள்? தேளிவாக முன்வைக்கமுடியுமா? எனஎதிரணியினர் கேள்விகளை எழுப்புகின்றனர். இவற்றிற்கெல்லாம் பதிலளிப்பவராக சுமந்திரன் மட்டுமே காணப்படுகிறார். அவர் கடந்தகால அரசியலுக்கும், தமக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி கடந்தகால நிலைப்பாடுகள் குறித்துப் பதிலளிக்காமல் தவிர்த்துவருகிறார். ஆனால் பழையபெருச்சாளிகள் தத்தமது உறவினர்களையும் வாரிசுகளையும் அரசியலுக்குள் எடுத்துச் செல்ல இத் தேர்தலைப் பயன்படுத்துவதில் முனைப்பாகஉள்ளனர்.

வடக்கு,கிழக்கு இணைப்புஉண்டா? பொலீஸ், காணி அதிகாரங்களின் நிலைஎன்ன? ராணுவம் வடக்கைவிட்டு வெளியேறுமா? சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா? போர்க் குற்றம் தொடர்பான விசாரணைகளின் கதிஎன்ன? வெளிநாட்டுநீதிபதிகள் இவ் விசாரணைகளில் இணைக்கப்படுவார்களா? மக்கள் இதற்கானதெளிவானபதில்களைஎதிர்பார்க்கிறார்கள்.

அரசாங்கத்திற்குள் காணப்படும் முறைகேடுகள், ஊழல் விசாரணைகள் தொடருமா? மத்தியவங்கிபிணை முறிவிவகாரம் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துமா? உள்ளுராட்சித் தேர்தலில் மைத்திரி தலைமையிலான சிறீலங்காசுதந்திரக் கட்சியினர் தோல்வி அடைந்தால் ஐதேகட்சியுடனான கூட்டுத் தொடருமா?

ஐதேகட்சிமேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில், சிறீலங்காசுதந்திரக் கட்சிக்கும், ஐ தேகட்சிக்கும் இடையே காணப்படும் முறுகல் நிலமைகளின் பின்னணில் தாம் தனித்து ஆட்சிநடத்தப் போவதாக ஐ தேகட்சியினர் கூறிவருகின்றனர். இவ்வாறான ஆட்சி அமைப்பதற்குக் கூட்டமைப்பினர் ஆதரவளிப்பார்கள் என சிங்களதரப்பில் பலரும் நம்புகின்றனர். இரண்டுபிரதானகட்சிகளும் இணைந்த காரணத்தினால்தான் தாம் அரசை ஆதரிப்பதாக் கூறிவரும் கூட்டமைப்பினர் ஐ தேகட்சியின் இந்த முடிவை ஆதரிப்பார்களா?

இவ்வாறான பல கேள்விகள் தாயகத்தில் மட்டுமல்ல, புலம்பெயர் தேசங்களிலும் எழுந்துள்ளன. இச் சந்தேகங்களுக்கான பதிலை அறியபணம் செலுத்தவேண்டுமா? புணம் அற்றவர்கள் அந்த அரசியலை அறியமுடியாதா? கூட்டச் செலவுகளைச் சமாளிக்கப் பணத்தைக் கோரலாம் .நியாயமானதே .புலம்பெயர் இலங்கைத் தமிழர் (Nசுவுளுடு) அமைப்பினர் அரசியல் அமைப்புநிபுணர் ஜெயம்பதிவிக்ரமரத்ன அவர்களை அழைத்து கூட்டங்களைப் பலதடைவைகள் நடத்தினர். அரசியல் அமைப்பின் முக்கியவிபரங்களை பலரும் அறியவேண்டும் என்றநோக்கில் செலவினத்தைச் சரிக்கட்ட சிறியதொகையை அறவிட்டுஅவ் முக்கிய கூட்டத்தைநடத்தினர். பலரும் பங்குபற்றினர்.

தேர்தல் செலவிற்கெனப் பணம் தேவைப்படின் தனிவிருந்தினை ஏற்பாடுசெய்யலாம். ஆனால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இவ் வேளையில் மக்கள் தமது ஜனநாயகஉரிமை தொடர்பான பலத்த எதிர்பார்ப்பில் இருக்கும் இச் சமயத்தில் பெரும் தொகைப் பணம் அறவிடப்படுவது அரசியலை ஏலம் கூறுவதற்கு ஒப்பானதாகும். இதற்கு சுமந்திரன் போன்றவர்கள் துணைபோவது ஏமாற்றத்தைஅளிக்கிறது.

thenee.com