Popular Tags:

நிலமின்றி விடுதலை சாத்தியமில்லை! வடமாகாண சபை மீது உலகப் பார்வை! – கனடாவில் சுமந்திரன்

November 6, 2013 at 7:30 pm
[ புதன்கிழமை, 06 நவம்பர் 2013, 08:12.43 PM GMT ]

சுவரின்றிச் சித்திரமில்லை என்பதைப் போல், எங்களது நிலங்களை நாம் இழந்து விடுவோகமாக இருந்தால், அதற்குப் பின் எமது அரசியல் விடுதலை என்பது ஒரு வெற்றுச் சீட்டுப் போன்றதாக மாறிவிடும் என கூட்டமைப்பு பா.உ. சுதந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை கனடா தமிழர் தேசியக் கூட்டமைப்பினரால் கனடா ஐயப்பன் ஆலயத்தில்  ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் மேற்குறிப்பிட்டவாறு சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புத்தூரில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

November 6, 2013 at 7:12 pm

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுள்ள பாலியல் வன்முறையுடன் கூடிய கொலைச் சம்பவங்களைக் கண்டித்தும், இவற்றில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தக் கோரியும் யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது.

வவுனியாவில் புத்த மதகுருவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

November 6, 2013 at 7:07 pm

 

நீதிமன்றம் வந்த பௌத்தமதகுருநீதிமன்றம் வந்த பௌத்தமதகுரு

வவுனியா எட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்துச் சிறுவன் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சந்தேக நபராகிய மதகுரு ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிமன்றம் புதனன்று உத்தரவிட்டிருக்கின்றது.

மன்னாரில் காணாமல் போனோர் குறித்து முறைப்பாடு

November 6, 2013 at 7:03 pm

 

காணாமல் போனவர்கள் குறித்து மன்னார், வன்னி மக்கள் முதலில் முறையிட்டபோது பிடிக்கப்பட்ட படம்காணாமல் போனவர்கள் குறித்து மன்னார், வன்னி மக்கள் முதலில் முறையிட்டபோது பிடிக்கப்பட்ட படம்

இலங்கையில் போர்க்காலத்தில் காணாமல் போனவர்களின் விவகாரம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் மன்னார் மாவட்டத்தில் காணாமல் போன சுமார் 2301பேர் குறித்த முறைப்பாடுகள் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது

November 6, 2013 at 7:01 pm

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு

தஞ்சை- விளார் சாலையில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இன்று புதன் திறந்துவைக்கப்பட்டது.

 விடுதலைப்புலிகளுடனான மோதல்களின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முற்றம் அமைக்கப்பட்டிருக்கிறது.

விசா வழங்காது இழுத்தப்பு! தஞ்சாவூருக்கு செல்வோரை கண்காணிக்கின்றது இலங்கை!

November 4, 2013 at 7:14 pm

தமிழ் நாட்டின் தஞ்சாவூரினில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திறப்பு விழாவிற்கு செல்வதற்கான விசா அனுமதி விவகாரத்தினில் இலங்கையிலுள்ள இந்திய தூதுவராலயம் இழுத்தடிப்புக்களை செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

தமிழ் நாட்டினில் நடைபெறவுள்ள திறப்பு விழா நிகழ்விற்கு செல்ல வட-கிழக்கிலிருந்து பல தரப்புக்களும் விருப்பம் வெளியிட்டுள்ளன.இந்நிலையினில் சமர்ப்பிக்கப்பட்ட தமது விண்ணப்பத்திற்கு என்ன நடந்ததென்பதை கூட தூதுவராலய அதிகாரிகள் தெரிவித்திருக்கவில்லையென மூத்த அரசியல்வாதியொருவர் கருத்து வெளியிட்டார்.சிலவேளைகளினில் அவ்வாறு விசா வழங்கப்பட்டாலும் பெரும்பாலும் சென்னை விமான நிலையத்தினில் வைத்த அவர்கள் திருப்பி அனுப்பவே முற்படுவார்களெனவும் அவர் தெரிவித்தார்.

நடேசன் மற்றும் புலித்தேவன் உடல்களில் திடுக்கிடும் தீச் சூட்டு தடயங்கள்

November 4, 2013 at 7:11 pm

pulithevan-jvpnews1nadesan-jvpnews pulithevan-jvpnews

nadesan-jvpnews2 pulithevan-jvpnews1nadesan-jvpnews pulithevan-jvpnews

1

தமிழீழ விடுதலைபுலிகளின் அரசியல் துறை பொறுப்பாளரும் சமாதான செயலகத்தின் பணிப்பாளருமான புலித்தேவன் உட்பட்ட நானூறுக்கு மேற்பட்ட போராளிகள் வெள்ளை கொடி தாங்கியபடி இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உள்ளத்தை உருக்கும் அரிய ஓவியங்கள்…

November 4, 2013 at 7:01 pm

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா (அழைப்பிதழ் இணைப்பு)

இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரமாண்ட அளவில் உலக வரலாற்றில் ஈழத் தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்ட மாபெரும் படுகொலையினை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்புவிழா எதிர்வரும் 08,09,10 ஆம் திகதிகளில் இடம்பெற உள்ளது.

குறித்த விழாவின் அழைப்பிதழ் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உள்ளத்தை உருக்கும் அரிய ஓவியங்கள்…

November 4, 2013 at 6:57 pm

ltte_ledis ltte_ledis1

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு: பழ.நெடுமாறன் அழைப்பு!

November 4, 2013 at 6:23 pm

 

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு: பழ.நெடுமாறன் அழைப்பு!
Posted Date : 15:51 (04/11/2013)Last updated : 15:54 (04/11/2013)

சென்னை: தஞ்சையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்ச்சியில், உலக தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”வரலாற்றுச் சிறப்பு மிக்க முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் திறப்பு நிகழ்ச்சி வருகிற 8 ஆம் தேதி தொடங்கி, 3 நாட்கள், தஞ்சை, விளார் சாலையில் அமைந்துள்ள முத்துக்குமார் திடலில், பாலச்சந்திரன் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.
மூன்று நாள் நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்காக விளார் சாலையில் உள்ள நினைவு முற்றத்தின் அருகிலேயே பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளும் இந்த பந்தலிலேயே நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கலந்து கொள்பவர்கள் தங்குவதற்குத் திருமண மண்டபங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


Hit Counter provided by technology news