Popular Tags:

பெண் ஒருவருக்கு இரண்டாவது போனஸ் இடம்:கூட்டமைப்பு முடிவு

September 29, 2013 at 9:07 pm

இலங்கையின் வடமாகாண சபைத் தேர்தலில் கிடைத்த இரண்டு போனஸ் இடங்களில் ஒன்றை சுழற்சி முறையில், முதலாவதாக ஒரு பெண்மணிக்கு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

வடமாகாண சபைக்குரிய போனஸ் இடங்களில் ஒன்றை பல்வேறுபட்ட சமூக நலன்களைக் கருத்திற்கொண்டு வருடாந்த சுழற்சி முறையில் அளிப்பது என்று கூட்டமைப்பு இன்று அதிகாரபூர்வமாக முடிவெடுத்துள்ளது.

மாதம்தோறும் 1,00,000 தெம்பான வருமானம் தரும் இத்தாலியத் தேனீ !

September 28, 2013 at 6:20 pm
ஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய்

உபதொழில்

தேன்… இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் எத்தனையோ அருட்கொடைகளில் ஒன்று. மருந்தாக, உணவாக, பூஜைக்காக, பிரசாதமாக, அழகுப்பொருளாக… என இதன் பயன்பாடுகளை, சொல்லிக் கொண்டே போகலாம்! ஆனால், இன்றைக்கு சுத்தமான தேன் கிடைப்பதுதான்… கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.

யாருக்கு தேன் தேவைப்பட்டாலும்… ”சுத்தமான (கலப்படமில்லாத) தேன் எங்கு கிடைக்கும்?” என்பதாகத்தான் அவர்களுடைய கேள்வி இருக்கிறது. ஆம், அந்தளவுக்கு இதில் கலப்படம் நிறைந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே… தட்டுப்பாடுதான்!

இப்படித்தான் சம்பளத்தை பிரிச்சிக்குறாங்க…

September 28, 2013 at 6:15 pm

சிங்கமும், சிறுத்தையும் சினிமாவில் மட்டுமின்றி, விளம்பரப் படங்களிலும் நடித்து வருகின்றனர். இதன்மூலம் பல லட்சங்களை அவர்கள் சம்பாதிப்பது ஊரறிந்த விஷயம்.
என்னதான் லட்சங்கள், கோடிகளில் சம்பாதித்தாலும், கல்யாணமாகி குழந்தை, குட்டி என்று செட்டிலான பிறகு, அவரவர் சம்பாத்யங்களை அவர்களே வைத்துக்கொள்வது தானே நல்லது.

தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பு கிடையாது! – மீண்டும் ஒலிக்கும் பாரதிராஜா குரல்

September 28, 2013 at 6:07 pm
சென்னை: தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பு கிடையாது… இனி தமிழ் சினிமாவுக்கென தனி சங்கங்கள் வேண்டும் என்று இயக்குநர்  பாரதிராஜா குரல் கொடுத்துள்ளார்.ஞானக்கிறுக்கன் படத்தின் இசையை வெளியிட்ட பாரதிராஜா, பின்னர் பேசியதாவது:சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதல் வரவில்லை என ஆர்.கே. செல்வமணி வருத்தப்பட்டார். பார்த்திபன் என்னை கவுரவித்தார்.

கிரிக்கெட் வாரியத் தலைவராக சீனிவாசன் நாளை போட்டியின்றி மீண்டும் தேர்வு?

September 28, 2013 at 5:51 pm
சென்னை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக என்.சீனிவாசன் நாளை மீண்டும் எதிர்ப்பின்றி தேர்வு செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது.கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்து வரும் என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் ஐபிஎல் பெட்டிங் புகாரில் சிக்கி சிறைக்குப் போனார். இதனால் அவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.பின்னர் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அமைத்த விசாரணைக் குழு, குருநாத் மெய்யப்பன் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை என்றது.

‘முட்டாள்தனமான அவசர சட்டம்’- ராகுல் விமர்சனத்தால் பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா?

September 28, 2013 at 5:47 pm
டெல்லி:  தண்டனை  பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர  சட்டத்தை முட்டாள்தனமானது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளதால் பிரதமர் மன்மோகன்சிங் அதிர்ச்சியடைந்துள்ளார். இது தமக்கு ஏற்பட்ட அவமானம் என்று கருதுவதால் பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு  செய்திருப்பதாக கூறப்படுகிறது.தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களைப்  பாதுகாக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாரதிய ஜனதா கட்சி மட்டுமின்றி ஆளும் காங்கிரஸிலும் எதிர்ப்பு எழுந்தது.

தமிழக மீனவர் படகுகளை பறிமுதல் செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு

September 28, 2013 at 5:38 pm

 

இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் (ஆவணப்படம்)இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் (ஆவணப்படம்)

இலங்கையின் வடகடலில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள காரைக்கால், நாகபட்டினம் ஆகிய இடங்களைச் சேர்ந்த 34 இந்திய மீனவர்களின் 5 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்யுமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெருகல் முருகன் சிலையை மீளப்பெற புதிய முயற்சி

September 28, 2013 at 5:36 pm

 

வெருகல் முருகன் கோயிலில் முருகனின் வேல் மூலமாக உள்ளது. காணாமல் போனது உற்சவ சிலை ஆகும்.வெருகல் முருகன் கோயிலில் முருகனின் வேல் மூலமாக உள்ளது. காணாமல் போனது உற்சவ சிலை ஆகும்.

தமிழ்நாடு சிலைகள் காப்பகத்திலுள்ள தமது ஆலயத்திற்குரிய சிலை என நம்பப்படும் முருகன் சிலையை மீளப்பெற தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியை நாடுவதற்கு வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

“2ஜி நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை அரைவேக்காட்டுத்தனமானது”

September 28, 2013 at 5:32 pm

 

முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ ராசாமுன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ ராசா

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி சி சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை அரைவேக்காட்டுத்தனமானது என்று திமுக குற்றம் சாட்டியிருக்கிறது.

மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் அவசியம்: சம்பந்தர்

September 28, 2013 at 5:29 pm

 

“இந்த உறவு மேம்பட காணி அதிகாரம் அவசியம்”

இலங்கையில் மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.


Hit Counter provided by technology news