Popular Tags:

ஏழு ஆண்டுகள் கடந்தால் நூற்றாண்டு!

November 1, 2013 at 8:21 pm
வின்டேஜ் கலெக்ஷன்
 

கார் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து, அது படிப்படியாக மாறிக் கொண்டே வந்த வரலாறு படுசுவாரஸ்யமானது. ஆரம்ப காலங்களில் காரில் மரத்தாலான பொருட்கள் நிறைய பயன்படுத்தப் பட்டன. சக்கரங்களில்கூட மரம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பின்புதான், கொஞ்சம் கொஞ்சமாக அவை குறைந்து, இப்போது அறவே இல்லாமல் ஆகிவிட்டது. ஆனாலும், சொகுசு கார் சிலவற்றில் டேஷ் போர்டில் மரப் பலகை பயன்படுத்தும் வழக்கம் இப்போதும் உண்டு. மரத்தால் வீல் ஸ்போக்குகள் கொண்ட கார் ஒன்று சென்னையில் இருக்கிறது என்று கேள்விப்பட்டோம். 1919-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த காரின் உரிமையாளர், ஸ்டீவ் போர்ஜியாவை (ஓட்டல் துறையில் முன்னணியில் இருக்கும்) சந்தித்தோம். 

ஆட்டோ அண்ணா!

November 1, 2013 at 7:58 pm
 

”சனங்க பார்த்துப் பயப்படுற லிஸ்ட்ல ஆட்டோக்காரங்களையும் சேர்த்து ரொம்ப நாளாச்சு!

அந்தப் பயத்தைப் போக்க சின்னதா ஒரு முயற்சி எடுத்திருக்கேங்ணா. எனக்கு எதுக்குங்ணா விளம்பரம்? பாராட்டுக்காக இதைப் பண்ணலைங்ணா. நமக்கு பப்ளிசிட்டிலாம் வேணாம்ணா!” – நிமிடத்துக்கு நான்கைந்து அண்ணாக்கள் போட்டுப் பேசும் இந்த 28 வயது இளைஞரின் பெயரே அண்ணாத்துரைதான்!

ஓ.எம்.ஆர் என அழைக்கப்படும் ராஜீவ் காந்தி சாலையில், ஷேர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துகிறார் இந்த அண்ணா. நார்மல் ஷேர் ஆட்டோவாக நினைத்து ஏறுபவர்களுக்கு ஆச்சரியங்களை ஆட்டோக்குள் வைத்திருக்கிறார். தமிழ், ஆங்கில வார, மாத இதழ்கள் மட்டுமே நாற்பதுக்கும் மேல் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன.

நடிகர் சந்தானம், தயாரிப்பாளர்கள் வீடுகளில் 2வது நாளாக சோதனை: ரூ.1 கோடி பறிமுதல்

November 1, 2013 at 7:50 pm
!
Posted Date : 15:51 (01/11/2013)Last updated : 16:04 (01/11/2013)

சென்னை: நடிகர் சந்தானம், தயாரிப்பாளர்கள் வீடு, அலுவலகங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், கணக்கில் காட்டப்படாத ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் படஉலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக சந்தானம், ஒரு நாள் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் சந்தானத்தின் வீட்டில்,  வருமானவரித்துறை அதிகாரிகள் இன்றும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினர்.
இதேபோல், சினிமா படஅதிபர்களான ஆர்.பி.சவுத்ரி, ஞானவேல்ராஜா, ஏ.எம்.ரத்னம் ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரி வேட்டை நடந்தது. ஆர்.பி.சவுத்ரியின் வீடு மற்றும் அலுவலகம் சென்னை தியாகராயநகரில் உள்ளது. இரண்டு இடங்களிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நெடுஞ்சாலை வாழ்க்கை!

November 1, 2013 at 7:11 pm

சேலத்தில் இருந்து கொல்கத்தா வரை நீளும் இந்தப் பயணத்தில், நான்காவது நாள் விசாகப்பட்டினம் தாண்டி ஒடிசா எல்லைக்கு முன்பாக உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பாதுகாப்பாகத் தூங்கி எழுந்தபோது, அதிகாலை 5 மணி. அனைவரும் பயணத்துக்கு ஆயத்தமானோம். அடுத்தது, இச்சாபுரம். இந்த ஊர்தான் ஆந்திரா – ஒடிசா எல்லை. ஆந்திர அரசின் ஐந்து துறைகளின் செக்போஸ்ட்டில் முத்திரைகள் வாங்கிக்கொண்டு, ஒடிசாவுக்குள் நுழைய வேண்டும்.

 

”இச்சாபுரத்தில் எனக்குக் கொஞ்சம் வாடகை பாக்கி வாங்க வேண்டி இருக்கிறது. எனவே, ஊருக்குள் செல்ல வேண்டும். அங்கு வேலை முடிந்ததும் பின்பு செக்போஸ்ட் கடக்கலாம்” என்றார் முருகன். நான்கு வழிச் சாலையில் இருந்து இச்சாபுரம் ஊருக்குள் நுழையும் சிறு சாலையில் லாரியைத் திருப்பினார் முருகன். சட்டென்று லாரிக்கு முன்னால் 10 வயது சிறுவன் ஒருவன் சைக்கிளுடன் வந்து மறித்தான்.

நெடுஞ்சாலை வாழ்க்கை!

November 1, 2013 at 7:06 pm

 

பதநீர் குடிக்கச் சென்ற நம்மை பெண்ணைக் காட்டி ஜாடை செய்ய, அதிர்ந்து சாலையை நோக்கித் திரும்பினோம். அங்கிருந்த ஒருவர் கூடவே வந்தார். நம்மைப் பின்தொடர்ந்த அந்த ஆணிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தோம். ”ஒண்ணும் பயப்படாதீங்க… எல்லாம் சேஃப்டிதான். நூறு ரூபாய்தான். நல்ல கம்பெனி கிடைக்கும். வேற எந்தப் பிரச்னையும் இல்லை” என்று நம்மை உற்சாகப்படுத்த முயற்சி செய்ய ஆரம்பித்தவர், அடுத்து கெஞ்ச ஆரம்பித்துவிட்டார். சாலையில் ஏறும்வரை அந்தப் பெரியவரின் மன்றாடல் தொடர்ந்தது. 

நெடுஞ்சாலை வாழ்க்கை!

November 1, 2013 at 7:02 pm

லாரியை சர்வீஸ் சாலையின் ஓரத்தில் நிறுத்தி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நம்மை எழுப்பி, ‘எல்லாப் பேப்பர்களையும் கொடு!’ என்று அதட்டினர் காவல் துறையினர். அப்போது அங்கே ஒரு டூ-வீலர் வந்து போலீஸ் அதிகாரியிடம் ஏதோ கூற… காவல் அதிகாரிகள் உடனே ஜீப்பில் ஏறி வேகமாகச் சென்றுவிட்டனர். பேட்ரோல் ஜீப் புறப்பட்டுச் சென்றதும், அடுத்து என்ன செய்வது எனத் திகைத்து அமர்ந்திருந்தோம். எங்களுக்கு எல்லாமே கனவில் நடப்பது போலத்தான் இருந்தது. லாரியின் டாப்பில் உறங்கிக்கொண்டு இருந்த ஜலேந்திரன் கீழே இறங்கிவந்தார்.

நெடுஞ்சாலை வாழ்க்கை!

November 1, 2013 at 6:58 pm

 

தேசிய நெடுஞ்சாலைகளில், லாரிகளை நம்பி ஏராளமான தொழில்கள் இருக்கின்றன. ஹோட்டல், வொர்க் ஷாப், பெட்ரோல் பங்க் தவிர்த்து சின்ன அளவில் தினசரி வருமானத்தை நம்பிப் பிழைக்கும் குடும்பங்கள் ஏராளம். பங்க் கடை, பஞ்சர் கடை, டீக்கடை, ஸ்டேஷனரி, துண்டு, லுங்கி விற்பவர்கள் மட்டுமல்லாது, டோல்கேட்டில் கிளீனிங் துணி முதல் வேர்க் கடலை வியாபாரம் பார்ப்பவர் வரை பட்டியலிட முடியும். இதில், 10 வயதுகூட நிரம்பாத சிறுவர் – சிறுமியரைப் பார்க்க நேர்வதுதான் நெடுஞ்சாலை அவலம். 

கருவிகள் பலவிதம்… ஒவ்வொன்றும் ஒரு விதம்..!

November 1, 2013 at 6:53 pm

 

‘எந்த விளைபொருளாக இருந்தாலும், அதை அப்படியே சந்தைப்படுத்தாமல் மதிப்புக் கூட்டி விற்றால்தான் அதிக லாபம் பார்க்க முடியும்’ என்கிற விழிப்பு உணர்வு, விவசாயிகள் மத்தியில் பெருகி வரும் காலமிது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்களிலும் மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சிகளும், அதற்கான கருவிகள் பற்றிய விவரங்களையும் சொல்லிக் கொடுத்து வருகிறார்கள். ‘பசுமை விகடன்’ கருவிகள் சிறப்பிதழுக்காக, காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் நிலைய மனையியல் துறை உதவிப் பேராசிரியை டாக்டர். விமலாராணியிடம் மதிப்புக்கூட்டும் கருவிகள் பற்றி கேட்டோம். அவர் தந்த தகவல்கள் இங்கே…

ஆட்சியர் இடமாற்றம்… ‘ஆஹா’ தஞ்சாவூர்..!’அய்யோ’ காஞ்சிபுரம் ?

November 1, 2013 at 6:51 pm

 

கடந்த சில தினங்களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கரன் காஞ்சிபுரம்  மாவட்டத்துக்கு மாற்றப்பட, ”இது தீபாவளி நேரத்துல எங்களுக்கு இனிப்பான செய்தி” என்று பட்டாசு வெடிக்காத குறையாக கொண்டாடுகிறார்கள்… தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள்!

”மனு கொடுக்க வரும் மக்களைத் திட்டி விரட்டுவது, விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் குறைகளை எடுத்துச் சொன்னால், ‘குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து விடுவேன்’ என மிரட்டுவது… என்று மக்கள் விரோத போக்கிலேயே செயல்படுகிறார் பாஸ்கரன்” என்று ஏகக் குற்றச்சாட்டுக்கள் உண்டு. இதைப் பற்றியெல்லாம் ‘பசுமை விகடன்’ இதழிலும் தொடர்ந்து பதிவு செய்திருக்கிறோம்.

இசைப்பிரியா வீடியோ உண்மையெனில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயந்தி நடராஜன்

November 1, 2013 at 6:41 pm

Posted Date : 15:54 (01/11/2013)Last updated : 16:32 (01/11/2013)

சென்னை: தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் உயிருடன் பிடித்து கொன்றது தொடர்பான சேனல் 4 தொலைக்காட்சியின் வீடியோ ஆதாரம் உண்மையெனில் மத்திய அரசு அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.
இசைப்பிரியா போரின் போதே கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசு கூறியிருந்தபோதிலும், அவர் இலங்கை ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டு கிடக்கும் காட்சிகளை சேனல் 4 ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், அவர் இலங்கை ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்டதற்கான ஆதாரத்தை சேனல் 4 இன்று காலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சருமான ஜெயந்தி நடராஜனிடம் இது குறித்து கேட்கப்பட்டது.


Hit Counter provided by technology news