வேதா கோபாலன் பற்றி

1956 நவம்பரில் பிறந்த இவர் சென்னை குரோம்பேட்டை வைணவக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். தனது கல்லூரி நாட்களில் முதலில் தந்தையிடமும், பிறகு சகோதரி திருமதி கீதா கண்ணனிடமும் ஜோதிடம் பயின்றவர். இவரின் ஜோதிடத் திறமையை பாலிஷ் செய்து செம்மைப்படுத்தித் தந்தவர் விவேகாநந்தா கல்லூரியின் ரசாயனத்துறையின் பேராசிரியர் டாக்டர் சுந்தரம். இந்த வகையில் இந்த மூவரும் தனது குரு-க்கள் என்ற சொல்வதில் பெருமையடைகிறார்.

இன்னும்  மேலும் மேலும் ஆர்வமாய் ஜோதிடம் கற்றுக்கொண்டிருக்கிறார். 1995ல், முதல் முதலாய்ப் பிரபல பத்திரிகை ஒன்றில் ராசிபலன் எழுத இவருக்கு வாய்ப்புத் தந்தனர். அதன்பின் மின்னம்பலம் டாட்காம், கல்கி, மங்கையர் மலர், தினகரன் என்று தொடர்ந்து… தற்போது தினமலரில் ராசி பலன்கள் மற்றும் எண் கணித பலன்கள் எழுதிக்கொண்டிருக்கிறார். சிஃபி டாட்காமில் ராசி பலன் மட்டுமின்றி அவர்களின் ஜோதிட ஆலோசனைக் குழுவிலும் பல காலம் பணியாற்றி கிட்டத்தட்ட ஆயிரம் வாடிக்கையாளர்களுக்குப் பலன் சொல்லியிருக்கிறார்.

லாஜிக், கணக்கு, வானியல் மூன்றும் இணைந்ததுதான் ஜோதிடம் என்றும் வானியல் ரீதியாக கிரகங்களின் நகர்வும், ஜோதிட ரீதியாகப் பெயர்ச்சி என்ற பெயரில் குறிப்பிடுபவையும் ஒன்றுதான் என்கிறார். ஜோதிடம், கைரேகை, எண்கணிதம், வாஸ்து என்பன எல்லாமே ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த விஞ்ஞானங்கள் என்று உரைக்கிறார்.

இவர் ஒரு ஜோதிடர் மட்டுமல்லாமல் சிறுகதை ஆசிரியர், மற்றும் நாவலாசிரியர். கிட்டத்தட்ட 900 சிறுகதைகள், ஐம்பது நாவல்கள் பல தொடர்கதைகள் எழுதியிருக்கிறார். சமீபத்தில் அல்லையன்ஸ் பதிப்பகத்தில் ஏறக்குறைய 25 நூல்கள் வெளியாகியிருக்கின்றன.

சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களின் திரைக்கதை விவாதங்களில் கலந்துகொண்டிருக்கிறார். டிவி நாடகங்களுக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் சம்பந்தமான இவருடைய வீடியோக்கள் பிரபல சானல்களிலும், யூ ட்யூபிலும் நூற்றுக்கணக்காக வந்துள்ளன.

தனிப்பட்ட முறையில் ஆலோசனைகள் கொடுக்கும்போதும், பொது வீடியோக்களிலும் தன் வார்த்தைகள் பலருக்கும் ஆறுதல் தருவதை இறையருள் என்று நினைக்கிறார்.

கட்டண சேவை

மூன்று அல்லது ஐந்து கேள்விகளுக்குள் வேலை, திருமணம், ஆரோக்கியம் தொடர்பான கேள்விகள் இருந்தால், சுருக்கமான பலன் அனுப்பப்படும். இவற்றைத் தனித்துக் கேட்டால், விரிவான பலன் அனுப்பப்படும்.

 

http://nallayogam.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/
Author


Hit Counter provided by technology news