ல் பொட்டம்மானை சந்தித்த நபரை இயக்குவது யார்…!! (Video)

 By Benat 2 மணி நேரம் முன்

 

Join us on our WhatsApp Group

யுத்தம் முடிந்து சரியாக ஒரு வருடத்தின் பிறகு கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு ஐரோப்பிய வட்டகையில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் தான் பொட்டமானைச் சந்தித்ததாகவும், அவரை சந்தித்த வேளை தூரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார் என கனடாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐரோப்பிய வட்டகையில் தமிழ் செயற்பாட்டாளர்களுள் ஒருவர் கூறினார், தான் ஒரு தீவுக்கு அழைக்கப்பட்டதாகவும், அந்த தீவிற்கு தான் செல்லும் போது அங்கு பொட்டம்மான் தான் என்னுடன் பேசினார். தலைவர் அல்ல, அவர் தள்ளியிருந்தார். அவரை நான் சந்திக்கவில்லை, பொட்டம்மன் என்னென்ன விடயங்களை செய்ய வேண்டும் என சொல்லிவிட்டிருக்கின்றார் என்று.

இந்த தகவலை அவர் பரிமாறியபோது, இதனுடைய உண்மைத் தன்மையினைத் தாண்டி, இதனை யார் சொல்ல வைக்கிறார்கள் என்று தேடிய போது அவர் இந்திய வட்டகைக்குள் இருப்பது தெரியவந்தது.

அதன் பிறகு நீண்டதொரு இடைவெளி, பின்னர் அண்மையக் காலங்களில் விடுதலைப் புலிகளினுடைய தலைவர் உயிருடன் இருக்கின்றார் என செய்தி பரவி வருகின்றது எனவும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதில் ஒரு மாற்றம்.. விடுதலைப் புலிகளின் தலைவர் இருக்கின்றார். ஆனால் செயற்பட முடியாதவராக இருக்கின்றார். அடுத்தக் கட்டத்திற்கு அவரது மகளை முன்னகர்த்திச் செல்லும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார் என குறிப்பிடுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு நாட்டுக்குள் சவாலுக்கு உரியவர்கள் வருகின்றார்கள் என்றால், அவர்களை உள் அனுமதிப்பது உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்வது அந்த நாட்டினுடைய தேசிய புலனாய்வுத் துறை.

ஏனெனில் அவர்களுக்கு தெரியாமல் இது போன்ற விடயங்கள் நடைபெறுமானால் அது அந்த நாட்டினுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

 

ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா (Photos)

ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா (Photos)

 

 

கிழக்கின் முக்கிய கொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் அசாத் மௌலானா மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள்

கிழக்கின் முக்கிய கொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் அசாத் மௌலானா மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள்

 

 

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

 

Author


Hit Counter provided by technology news