காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka TourismSri LankaIndia
 5 நிமிடங்கள் முன்

Join us on our WhatsApp Group

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட  தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இக்கப்பல் சேவையை நடத்துவதற்கான பூர்வாங்க அனுமதிகள் இரண்டு அரசாங்கங்களிடம் இருந்தும் கிடைத்து விட்டன எனவும், இதற்காக இந்திய கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் தமது நிறுவனத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

இக்கப்பல் டிசம்பர் நடுப்பகுதியில் நாகபட்டினத்திற்கு வந்து சேரும் என கூறிய அவர், இக்கப்பலில் 150 பயணிகள் தலா 60 கிலோ பொதிகளுடன் (check in baggage) பயணிக்களாம் எனவும் கூறியுள்ளார்.

 

மாலைத்தீவின் 8ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் முகமது மூயிஸ்

மாலைத்தீவின் 8ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் முகமது மூயிஸ்

 

கப்பல் பயணத்துக்கான பதிவு

ஒரு வழிப் பயணக் கட்டணமாக இந்திய ரூபாவில் 4,250 மற்றும் வரிகளும் அறவிடப்படும் எனவும், இலங்கை ரூபாவில் 17,000 மற்றும் வரிகள் அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை தொடர்பில் வெளியான தகவல் | Kangesanthurai Nagapattinam Ship Service

 

இலங்கையின் பிரதான விற்பனை முகவர் மூலமாகவோ அல்லது அவர்களின் துணை முகவர்களினூடகவோ அல்லது விரைவில் வெளியிடப்பட இருக்கும் அன்ரோய்ட் மற்றும் ஐஓஎஸ் செயலி மூலமாகவோ கப்பல் பயணத்துக்கான பதிவுகளை மேற்கொள்ளமுடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

ஜேர்மனியில் மதுபோதையில் கப்பல் ஓட்டிய பெண்: விபத்தில் 1.5 மில்லியன் யூரோ இழப்பு

ஜேர்மனியில் மதுபோதையில் கப்பல் ஓட்டிய பெண்: விபத்தில் 1.5 மில்லியன் யூரோ இழப்பு

 

 

இந்திய இராணுவத்தை திரும்பப் பெறுமாறு மாலைத்தீவு அதிகாரபூர்வ கோரிக்கை

இந்திய இராணுவத்தை திரும்பப் பெறுமாறு மாலைத்தீவு அதிகாரபூர்வ கோரிக்கை

Author


Hit Counter provided by technology news