Breaking

யாழ் சித்தங்கேணி இளைஞன் படுகொலை – பொலிசார் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Sri Lanka PoliceJaffnaSri Lanka Magistrate CourtNorthern Province of Sri Lanka
 10 நிமிடங்கள் முன்

Kajinthan

Kajinthan

in சமூகம்

Join us on our WhatsApp Group

சித்தங்கேணி இளைஞன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்தங்கேணி இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

நீதிமன்றத் தீர்ப்பு

இந்த வழக்கில் 50ற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகி இருந்தனர்.

யாழ் சித்தங்கேணி இளைஞன் படுகொலை - பொலிசார் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Order To Arrest The Two Police Officers

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞன் அடையாளம் காட்டும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.

சட்டத்தரணிகளின் விண்ணப்பத்தின் பேரிலே இன்றையதினம் சாட்சியமளித்த ஐந்து சாட்சிகளிலே மூன்றாவது சாட்சியாக சாட்சியமளித்த நபர் இறந்தவர்களுடன் சமகாலத்தில் தானும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த சாட்சி தனது வாக்குமூலத்திலே தான் பொலிஸ் நிலையத்திற்கு வெளியிலே சில இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டதன் அடிப்படையில் குறித்த இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று அந்த இடங்களை அடையாளம் காட்டுவதற்கும், விஞ்ஞானபூர்வமான பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்குமாக கட்டளை ஒன்றை ஆக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் குறிப்பிட்ட நபரை அழைத்து செல்லும் பொழுது அவருடைய நலன்களை உத்திரவாதப்படுத்துவதற்கு சட்டத்தரணிகளால் பெயர் குறிப்பிடப்பட்ட இரண்டு சட்டத்தரணிகள் அவருடன்  செல்வதற்கு  நீதிமன்ற அனுமதி வழங்கியுள்ளது.

இன்றையதினம் மன்றுக்கு சாட்சியமளித்த சட்ட வைத்திய அதிகாரி, இறந்தவருடைய உடலில் காணப்பட்ட காயங்களை விவரித்ததோடு அந்த காயங்கள் தொடர்பான அபிப்பிராயத்தையும், காயங்கள் மூலமாகத்தான் மரணம் ஏற்பட்டுள்ளது என்பதனையும், மரணம் ஏற்படுவதற்கு அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டது தான் பிரதான காரணம் எனவும் கூறியுள்ளார்.

 

சிங்கள இளைஞர்களுக்கு சபையில் வைத்து அழைப்பு விடுத்த சிறீதரன்(Video)

சிங்கள இளைஞர்களுக்கு சபையில் வைத்து அழைப்பு விடுத்த சிறீதரன்(Video)

 

 

மரண தண்டனை எதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயார்: பொதுமன்னிப்பில் விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

மரண தண்டனை எதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயார்: பொதுமன்னிப்பில் விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

 

 

பாடசாலைகளின் டிசம்பர் மாத விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாடசாலைகளின் டிசம்பர் மாத விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
Author


Hit Counter provided by technology news