துவாரகாவின் பெரியப்பா மனோகரன் கூறிய முக்கிய இரகசியம் (Video)

LankasriSri Lankan TamilsDenmark
 2 மணி நேரம் முன்

Join us on our WhatsApp Group

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவருக்கு 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக எமது உறவினர் ஒருவர் காணொளி வெளியிட்டு குறிப்பிட்டார், ஆனால் அது தொடர்பான விபரங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளவில்லை. அதில் தான் எங்களுக்கு சந்தேகம் வலுத்தது என விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் அண்ணன் மகன் மனோகரன் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எங்களது சித்தப்பாவின் மகள்  துவாரகாவைச் சென்று சந்தித்துவிட்டு வந்ததாக, எமது உறவினர் அருணா கூறினார். எனினும், துவாரகாவைச் சந்தித்ததற்கான எந்தவொரு புகைப்படங்களோ, காணொளிகளோ அவர் எடுத்திருக்கவில்லை.

துவாரகா மற்றும் எனது சித்தப்பாவின் குடும்பத்தாரைச் சந்தித்து வந்துவிட்டதாகச் சொல்லி இரண்டு முறை அருணா காணொளிகளை வெளியிட்டிருந்தார். ஒருமுறையாவது அவர்களை சந்தித்ததற்கான புகைப்படங்களை வெளியிட்டிருக்கலாம். அல்லது அந்த செய்தியை எங்களோடு பகிர்ந்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

நாங்கள் அழைத்தபோது அவர்களுடைய தொலைபேசி இயங்கவில்லை. இதன்காரணமாகத்தான் எமக்கு சந்தேகம் வலுக்கத் தொடங்கியது என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

 

கொழும்பில் சரிந்து விழுந்த பாரிய பதாதை

கொழும்பில் சரிந்து விழுந்த பாரிய பதாதை

 

 

சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறிய இலங்கையின் மின்தடை

சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறிய இலங்கையின் மின்தடை

 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
Author


Hit Counter provided by technology news