பிரணவ் ஜூவல்லரி மதன் செல்வாரஜை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

மதன் செல்வராஜ்

பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர்களான மதன் செல்வராஜ், இவரது மனைவி கார்த்திகா ஆகியோர் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு தடுப்பு வழக்குப்பதிவு செய்து வெளிநாட்டுக்குத் தப்பி செல்லமுடியாத வகையில் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடி வந்தனர்.

நகை சேமிப்புத் திட்டம் மூலம் பொது மக்களிடம் பல கோடி ரூபாயை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜை, டிசம்பர் 18-ஆம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட டான்பிட்(TANPID) நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

பிரணவ் ஜூவல்லர்ஸ்

பிரணவ் ஜூவல்லர்ஸ்

Also Read

பிரகாஷ் ராஜ்: அமலாக்கத்துறையின் ‘குறி’ - பிரணவ் ஜுவல்லர்ஸ் விளம்பரம் மட்டும்தான் காரணமா?

பிரகாஷ் ராஜ்: அமலாக்கத்துறையின் ‘குறி’ – பிரணவ் ஜுவல்லர்ஸ் விளம்பரம் மட்டும்தான் காரணமா?

தமிழ்நாடு முழுவதும் பல நகரங்களில் பிரணவ் ஜூவல்லரி என்ற பெயரில் நகை கடைகளைத் தொடங்கி மாதாந்திர நகை சேமிப்புத் சீட்டு திட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், தீபாவளியின்போது பணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு சீட்டுப் பணம் திரும்ப அளிக்காமல் திடீரென கடைகள் மூடப்பட்டது.

பாதிக்கப்பட்ட பொதுமக்களின் புகாரின் பேரில் மதுரை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

ரூ 100 கோடி அளவிற்கு மோசடி நடைபெற்றிருக்கலாம் என்ற நிலையில், பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டு திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

மதன் செல்வராஜ்

மதன் செல்வராஜ்

Also Read

பிரணவ் ஜூவல்லர்ஸ் முறைகேடு... மக்களின் பேராசையும் காரணமா?

பிரணவ் ஜூவல்லர்ஸ் முறைகேடு… மக்களின் பேராசையும் காரணமா?

இந்த நிலையில், பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர்களான மதன் செல்வராஜ், இவரது மனைவி கார்த்திகா ஆகியோர் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு தடுப்பு வழக்குப்பதிவு செய்து வெளிநாட்டுக்குத் தப்பி செல்லமுடியாத வகையில் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி மதுரை மாவட்ட முதலீட்டாளர் நலன் சிறப்பு நீதிமன்றத்தில் பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளரான மதன் செல்வராஜ் சரணடைந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரை டிசம்பர் 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், மதுரை மத்திய சிறையில் மதன் செல்வராஜ் அடைக்கப்பட்டார்.

மதன் செல்வராஜை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறை சார்பில் மதுரை மாவட்ட முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

பிரணவ் ஜூவல்லர்ஸ்

பிரணவ் ஜூவல்லர்ஸ்

Also Read

தண்ணீர் வடிந்துவிட்டது... ஆனால்... சென்னையை அச்சுறுத்தும் குப்பை குவியல்கள்!

தண்ணீர் வடிந்துவிட்டது… ஆனால்… சென்னையை அச்சுறுத்தும் குப்பை குவியல்கள்!

அப்போது, வரும் 18-ஆம் தேதி வரை மதன் செல்வராஜை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து மதன் செல்வராஜை திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறை துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் தலைமையிலான காவல் துறையினர் விசாரணைக்காக பாதுகாப்புடன் அழைத்துச்சென்றனர்.

இதனிடையே தலைமறைவாகியுள்ள மதன் செல்வராஜின் மனைவி கார்த்திகாவைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்!

Author


Hit Counter provided by technology news