மாடுகள், மான்கள், குளங்கள்; 300 ஏக்கரில் பார்ம் டூரிஸம்; நடிகர் நெப்போலியன் பண்ணையின் சிறப்புகள்!

நெப்போலியன் ஃபார்ம் ஹவுஸ் ( @irfans view )

“சின்ன வயசுல நல்லா படிக்கலனா மாடுமேய்க்கத்தான் லாயக்குனு சொல்வாங்க… நான் நல்லா படிச்சிட்டு இங்கு மாடு மேய்க்குறேன்’’ என்று நகைச்சுவையாகத் தனது பண்ணையைச் சுற்றிக் காட்டியுள்ளார் நெப்போலியன்.

கிழக்குச் சீமையிலே, எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர், நெப்போலியன். அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டிலாகி இருக்கும் நெப்போலியன் விவசாயம் செய்வதோடு, பண்ணை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார். இந்த பண்ணைக்கு  `நெப்போலியன் பண்ணை’ எனத் தனது பெயரையே வைத்திருக்கிறார்.

பிரபல யூடியூபரான இர்பான் கடந்த ஆண்டு நெப்போலியன் வீட்டின் `ஹோம் டூர்’ வீடியோவை வெளியிட்டு இருந்தார். இப்போது அமெரிக்கா நாஷ்வில்லியில் உள்ள நெப்போலியனின் 300 ஏக்கர் விவசாய நிலத்தைச் சுற்றிக்காட்டி `ஃபார்ம் டூர்’ வீடியோவை பதிவிட்டுள்ளார்.

 நெப்போலியன் - இர்பான்

நெப்போலியன் – இர்பான்
@irfans view

Also Read

ஆண்டிபட்டியா இருந்தா என்ன, அமெரிக்காவா இருந்தா என்ன? விவசாயத்தில் அசத்தும் நடிகர் நெப்போலியன்!

ஆண்டிபட்டியா இருந்தா என்ன, அமெரிக்காவா இருந்தா என்ன? விவசாயத்தில் அசத்தும் நடிகர் நெப்போலியன்!

அந்த வீடியோவில் பண்ணை எப்போது வாங்கப்பட்டது என்று பேச ஆரம்பித்த நெப்போலியன், “இந்த பண்ணையை வாங்கி மூன்று வருடங்களுக்கு மேலாகிறது. சில வருடங்களுக்கு முன்பு குதிரை பண்ணை வைத்திருந்தேன். குதிரையைப் பார்க்க இந்த இடத்தை கடந்து செல்வேன்.

இந்த இடம் மிகவும் பிடித்து இருந்தது, உரிமையாளரிடம் பேசியபோது இங்குள்ள `ஃபார்ம் ஹவுஸ்’ 1963-ல் கட்டப்பட்டது என்றார். ஆச்சர்யம் என்னவெனில் நான் பிறந்த வருடத்தில் இந்த வீட்டை கட்டியிருக்கிறார்கள். அதைக் கேட்டதும் இந்த இடத்தை வாங்கிவிட்டேன்.

முதல் 2 வருடங்களில் 200 ஏக்கரில் புல் மட்டுமே வளர்த்தேன். புல்லை அறுவடை செய்து மாடுகளுக்கும் குதிரைகளுக்கும் விற்றேன்.

கேரள இனத்தைச் சேர்ந்த 250 மாடுகள் இருக்கிறது. இந்த மாடுகளை பிரிட் என்பவர் கவனித்துக் கொள்கிறார். 200 மாடுகளில் இருந்து பண்ணையை தொடங்கினோம். மாடுகள் கன்றுகள் ஈன்ற நிலையில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாடுகள்

மாடுகள்
@irfans view

Also Read

11 பெண்களுக்கு வெள்ளாடுகள்; மொய்விருந்து நடத்தி உதவிய டீக்கடைக்காரர்... பாராட்டுக்குரிய முயற்சி!

11 பெண்களுக்கு வெள்ளாடுகள்; மொய்விருந்து நடத்தி உதவிய டீக்கடைக்காரர்… பாராட்டுக்குரிய முயற்சி!

கன்றுகளைத் தனியாகவும், மாடுகளைத் தனியாகவும், விற்பனை செய்யப்பட உள்ள மாடுகளை தனியாகவும் பிரித்து வைத்துள்ளோம். நம்முடைய ஊரில் மாடுகளை வெளியே கட்டிவைப்பது போல இல்லை; 365 நாட்களும் மாடுகள் வெளியே சுற்றித் திரியும்.

25 ஏக்கர் என நிலத்தை ஒவ்வொரு பகுதியாக பிரித்து வைத்துள்ளோம். நிலத்தில் பசும்புல் மேயப்பட்டவுடன் அடுத்த 25 ஏக்கர் பசும்புல் இருக்கும் இடத்தில் மாடுகளை விடுவோம். மாடுகளுக்கு வைத்தியம் பார்க்கவும் இடமுள்ளது. மாடுகளை வளர்த்து இறைச்சிக்காக விற்கிறோம்.

மேலும், மே தொடங்கி அக்டோபர் வரை சீசன் டைமில் புடலங்காய், அவரைக்காய், பாகற்காய், சுரைக்காய் கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி என அனைத்தையும் வளர்ப்போம். ஆறு மாத காலத்தில் வீட்டிற்குத் தேவையான காய்கறிகளை  எடுத்துக்கொண்டு, நண்பர்கள் மற்றும் ஊழியர்களுக்குக் கொடுத்து விடுவோம்.

கிரீன் ஹவுஸ் போடுவதற்கும் திட்டம் இருக்கிறது. அங்கு மாதுளை, கொய்யா, எலுமிச்சை போன்றவற்றை வளர்க்க உள்ளேன்.

செயற்கை குளம்

செயற்கை குளம்
@irfans view

Also Read

`மாட்டுச் சாணத்திலிருந்து ராக்கெட் எரிவாயு...?!' மாத்தியோசிக்கும் ஜப்பான்..!

`மாட்டுச் சாணத்திலிருந்து ராக்கெட் எரிவாயு…?!’ மாத்தியோசிக்கும் ஜப்பான்..!

500 நபர்கள் பங்கு பெறுமளவிற்கு கொண்டாட்டங்களுக்கு என பார்ட்டி ஹால் இருக்கிறது. சமீபத்தில் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களின் ரீ யூனியன் இங்கு நடைபெற்றது. நிகழ்ச்சி நடக்க தேவையான அனைத்து உபகரணங்களும் வாங்கி வைத்திருக்கிறேன்.

நிலத்திற்குத் தேவையான நீரை ஒரு ஏக்கரில் செயற்கையாக வெட்டப்பட்ட குளத்தில் இருந்தே எடுக்கிறோம். இதைப் போன்று இன்னும் இரண்டு குளம் உள்ளது. இதில் மீன்கள் வளர்க்கவும் திட்டமிட்டுள்ளேன்.

பண்ணைக்குள் 80 ஏக்கர் நிலப்பரப்பில் காடும் உள்ளது. இங்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கான இடமும் உள்ளது. மான்களை வேட்டையாடவும் செய்யலாம். மான்களின் இனப்பெருக்கம் அதிகரித்து, சாலைகளில் வந்து அடிபட்டு இறப்பதைத் தடுக்க அமெரிக்க அரசு, மான்களை வேட்டையாடுவதற்கான அனுமதியைக் குறிப்பிட்ட மாதங்களுக்கு வழங்கும்.

குடும்பமாகவும், நண்பர்களாகவும் சேர்ந்து ரிலாக்ஸாக இருக்க 3 பெட் ரூம், கிச்சன், கழிவறை அடங்கிய பார்ம் ஹவுஸ் உள்ளது. இங்குள்ள டைனிங் டேபிள் மற்றும் இருக்கை ஒரே மரத்தினால் செய்யப்பட்டது.

டைனிங் டேபிள்

டைனிங் டேபிள்
@irfans view

Also Read

எருமை வளர்ப்பில் ரூ.1 கோடி வருமானம்... பட்டதாரி பெண்ணின் மாட்டுப் பண்ணை!

எருமை வளர்ப்பில் ரூ.1 கோடி வருமானம்… பட்டதாரி பெண்ணின் மாட்டுப் பண்ணை!

பண்ணை நிலத்தை வாங்கும் போது, உரிமையாளர் பரிசாக வந்த பொருள் என இந்த டைனிங் டேபிளை தர மறுத்துவிட்டார். இதற்காக 16 லட்சம் வரை தனியாகக் கொடுத்து வாங்கினேன். இவ்வளவு பெரிய பண்ணையில் நடப்பது கடினம். இதற்காக பண்ணையைச் சுற்றி பார்க்க 2 ஏடிவி (All Terrain Vehicles) வண்டி உள்ளது.

ஏசியுடன் கூடிய ஒரு டிராக்டர், ஒரு கேட்டர்பில்லர் வாகனம், புல்லை வெட்டும் இரண்டு லான் மொவர் (Lawn mower) வாகனங்கள், பெரியளவிலான புற்களை அறுக்க புஷ் ஹாக் (bush hog) கருவியும் உள்ளது. சின்ன வயசுல நல்லா படிக்கலனா மாடுமேய்க்கத்தான் லாயக்குனு சொல்வாங்க… நான் நல்லா படிச்சிட்டு இங்கு மாடு மேய்க்குறேன்’’ என்று நகைச்சுவையாகத் தனது பண்ணையைச் சுற்றிக் காட்டியுள்ளார் நெப்போலியன்.

இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Author


Hit Counter provided by technology news