29 ஆண்டுகளுக்குப் பின் மறுகால் பாயும் கண்மாய்… மலர் தூவி வரவேற்ற மக்கள்..!

சிகுஓடை கண்மாய்

29 ஆண்டுகளுக்குப் பிறகு தேனி நகர் அருகே உள்ள சிகுஓடை கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வளிமண்டல சுழற்சி காரணமாக டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி மாவட்டத்தில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் அனைத்தும் நிறைந்தன. குறிப்பாக 29 ஆண்டுகளுக்கு பிறகு தேனி நகர் அருகே உள்ள சிகுஓடை கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கண்மாய்

கண்மாய்

Also Read

`ஒருபோதும் வாக்குவாதம் செய்ததில்லை'... 100 வயதைக் கடந்த தம்பதிகளின் க்யூட் லவ் ஸ்டோரி!

`ஒருபோதும் வாக்குவாதம் செய்ததில்லை’… 100 வயதைக் கடந்த தம்பதிகளின் க்யூட் லவ் ஸ்டோரி!

தேனி அன்னஞ்சி விலக்கில் இருந்து மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 110 ஏக்கரில் 60 அடி ஆழம் கொண்ட சிகுஓடை கண்மாய் உள்ளது. மலை அடிவாரத்தில் உள்ள திம்மராய பெருமாள் கோயில் அருகே தம்பிரான்கானல் பகுதியில் இருந்து வரும் நீர் அல்லிநகரம் அருகே உள்ள 22 ஏக்கர் பரப்பு கொண்ட சின்னக்குளம் கண்மாய்க்கும் அங்கிருந்து 100 ஏக்கர் பரப்பு கொண்ட மீறுசமுத்திரம் கண்மாய்க்குச் செல்லும். இவ்விரண்டு கண்மாய்களும் நிறைந்த பிறகு சிகுஓடை கண்மாய்க்கு நீர் திறக்கப்படும்.

இதனால் கடந்த 1985 -ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கண்மாய்யில் ஒரீரு முறை மட்டுமே நிறைந்திருக்கிறது. இருப்பினும் ஒருமுறை கூட மறுகால் பாய்ந்தது இல்லை. இந்நிலையில் 1994 -ம் ஆண்டுக்கு பிறகு நிறைந்துள்ள கண்மாய்யில் இருந்து முதல் முறையாக மறுகால் பாய்ந்து கொண்டிருப்பதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பூக்கள் தூவிய கிராம மக்கள்

பூக்கள் தூவிய கிராம மக்கள்

Also Read

கரூரில் வெப்பநிலையை உயர்த்திய கல்குவாரிகள்; கவனம் ஈர்த்த மாணவிகளின் ஆய்வுக் கட்டுரை!

கரூரில் வெப்பநிலையை உயர்த்திய கல்குவாரிகள்; கவனம் ஈர்த்த மாணவிகளின் ஆய்வுக் கட்டுரை!

இதை கொண்டாடும் விதமாக ஊஞ்சாம்பட்டி உள்ளிட்ட கிராம மக்களும் ஆயக்கட்டு குழுவினரும் சேர்ந்து மறுகால் பாயும் பகுதியில் பூக்களை தூவியும், பூசணிக்காய் உடைத்தும் ஆண்டுதோறும் கண்மாய் நிறைந்து மண்ணும் மக்களும் செழிக்க வேண்டும் என வழிபாடு நடத்தினர்.

ஆயக்கட்டு குழு செயல்தலைவர் கருப்பசாமி

ஆயக்கட்டு குழு செயல்தலைவர் கருப்பசாமி

இதுகுறித்து நம்மிடம் பேசிய சிகுஓடை கண்மாய் ஆயக்கட்டு குழு செயல்தலைவர் கருப்பசாமி, ”இந்த கண்மாய் 29 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்து மறுகால் பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த கண்மாய் மூலம் பொம்மையகவுண்டன்பட்டி, அல்லிநகரம், அன்னஞ்சி, வடபுதுபட்டி உள்பட 10 கிராமங்களின் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகும். கோடைகாலத்தின் போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோடைகாலத்தில் ஆழ்துளை குழாய்களில் 1000 அடியில் கூட தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். ஆனால் கடந்த வாரம் பெய்த மழையால் நிறைந்துள்ள இந்த கண்மாய் மூலம் தற்போது 50 அடியில் தண்ணீர் கிடைக்கிறது.

பூசணிக்காய் உடைக்கும் மக்கள்

பூசணிக்காய் உடைக்கும் மக்கள்

சுற்றுவட்டார கிணறுகள் அனைத்தும் நிறைந்து விட்டன. இன்னும் 5 ஆண்டுகளுக்கு கூட நிலத்தடி நீர் குறையாது. எனவே பொதுப்பணித்துறையினர் வலுவிழந்துள்ள இந்த கண்மாய் கரைகளை பலப்படுத்த வேண்டும்” என்றார்.

Author


Hit Counter provided by technology news