பர்கூர் நாட்டு மாடு ஆராய்ச்சி நிலையத்துக்கு மத்திய அரசு விருது! நாட்டு மாடுகளுக்கு கிடைத்த பெருமை

பர்கூர் நாட்டு மாடுகள்!

தனித்த நாட்டு மாட்டு இனத்துக்காக சிறப்பாகச் செயல்படும் ஆராய்ச்சி மையங்களில் பர்கூர் நாட்டு மாட்டின ஆராய்ச்சி மையம் தேர்ந்தெடுத்திருப்பது நாட்டு மாட்டினத்துக்குக் கிடைத்த பெருமை.

தமிழகத்தின் நாட்டு மாட்டினங்களில் ஒன்றான பர்கூர் மாட்டினத்தைப் பாதுகாக்க ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பர்கூரில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தால் பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையத்துக்குச் சிறந்த முறையில் நாட்டின மாடுகளை பாதுகாப்பதற்கான தேசிய அளவிலான `இன பாதுகாப்பு விருது-2023′ தேசிய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய விலங்கின மரபுவள வாரியம் மூலம் தேசிய விவசாயிகள் தினமான 23.12.2023 அன்று பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையத்துக்கு வழங்கப்பட்டது.

மத்திய அரசு வழங்கிய விருது

மத்திய அரசு வழங்கிய விருது

Also Read

``பூமர் டாக்கை நிறுத்தாதீங்க... கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க!"

“பூமர் டாக்கை நிறுத்தாதீங்க… கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க!”

இந்த விருதை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கால்நடை உற்பத்தி மைய இயக்குநர் முனைவர் எஸ்.மீனாட்சி சுந்தரம், பர்கூர் நாட்டு மாட்டின ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியர் கணபதி உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

பர்கூர் நாட்டு மாட்டின ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியர் கணபதியிடம் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு பேசினோம். “2015-ம் ஆண்டு இந்த ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. இங்கு பர்கூர் நாட்டினத்தைச் சேர்ந்த 170 மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 3 இடங்களில் 59 ஏக்கர் பரப்பளவில் நாட்டு மாட்டுப் பண்ணைகள் அமைந்துள்ளன. இந்தியா முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நிலையங்கள் இந்த விருதுக்குப் போட்டியிட்டன.

துணைவேந்தரிடம் விருது காட்டியபோது

துணைவேந்தரிடம் விருது காட்டியபோது

Also Read

பூமிக்கடியில் விவசாயம்; குளிர், வெயில் இரண்டையும் சமாளிக்கலாம்; இது எங்கே தெரியுமா?

பூமிக்கடியில் விவசாயம்; குளிர், வெயில் இரண்டையும் சமாளிக்கலாம்; இது எங்கே தெரியுமா?

அதில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழத்தின் கீழ் பர்கூர் நாட்டு மாட்டின ஆராய்ச்சி மையமும் ஒன்று. தமிழ்நாட்டை போன்றே கர்நாடகாவின் அமிர்த மகால் ஆராய்ச்சி மையம், ஆந்திராவில் ஓங்கோல் மாட்டின ஆராய்ச்சி மையமும் விருது பெற்றிருக்கின்றன. தனித்த நாட்டு மாட்டு இனத்துக்காக சிறப்பாகச் செயல்படும் ஆராய்ச்சி மையங்களில் பர்கூர் நாட்டு மாட்டின ஆராய்ச்சி மையம் தேர்ந்தெடுத்திருப்பது நாட்டு மாட்டினத்துக்குக் கிடைத்த பெருமை.

2012-ல் மேற்கொண்ட 19-வது கால்நடை கணக்கெடுப்பின்படி இந்த மையம் தொடங்குவதற்கு முன்பு 14,154 பர்கூர் மாடுகள் மட்டுமே இருந்தன. 2019-ல் எடுக்கப்பட்ட 20-வது கணக்கெடுப்பின்படி 42,300 மாடுகள் என்ற எண்ணிக்கையில் அதிகரித்துள்ளன. தொடர்ந்து இந்த நாட்டு மாட்டினம் பரவலாவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறோம். 150 – 200 கிலோ எடைக் கொண்ட இந்த மாடுகளுக்குத் தினமும் 15 – 20 கிலோ தீவனம் போதுமானது. ஆனால், அதேசமயம் கலப்பின சீமை மாடுகளுக்குக் குறைந்தபட்சம் 25 – 40 கிலோ வரை தீவனம் தேவைப்படும். கலப்பின மாடுகளுக்கு அதிகமாகச் செலவு செய்துவிட்டு குறைந்த லாபம்தான் எடுக்க முடிகிறது. இதில் பால், நெய், கன்றுக்குட்டி என்று பல விதங்களில் வருமானம் பார்க்க முடியும்.

பர்கூர் மாட்டின ஆராய்ச்சி மையம்

பர்கூர் மாட்டின ஆராய்ச்சி மையம்

Also Read

கழுகின் கால்களில் ரகசிய எண்கள்... உளவுக்கு பறவைகளை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

கழுகின் கால்களில் ரகசிய எண்கள்… உளவுக்கு பறவைகளை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

எத்தகைய வறட்சியான நிலையிலும் தாக்குப் பிடித்து வளரும். அதேபோல எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கும். பர்கூர் மாடுகளின் இனப்பெருக்கத்துக்காகவும், அதைப் பரவலாக்கவும் பண்ணையில் கன்றுகள் தனியாகவும், மாடுகள் தனியாகவும் பராமரித்து வருகிறோம். அந்த வகையில் பாலுக்கெனவே தனியாகப் பராமரித்து வருகிறோம். கறவை மாட்டுக்கு… கோ.4 பசுந்தீவனப்புல், மக்காச்சோளத் தட்டு சுமார் 15 கிலோ… இவற்றோடு ஒரு கிலோ அடர்தீவனம் தினமும் கொடுத்தால் ஒரு நாளைக்கு 5 – 6 லிட்டர் கறப்பதை உறுதி செய்திருக்கிறோம்.

பர்கூர் நாட்டு மாடு

பர்கூர் நாட்டு மாடு

விவசாயிகளிடமும் இதை வலியுறுத்தி வருகிறோம். அவர்களில ஒருசிலர் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர். எங்கள் ஆய்வில் பெரிய அளவில் இந்த மாடுகளில் நோய்த் தொற்று ஏற்பட்டதில்லை. தடுப்பூசிகள் மட்டும் முறையாகப் போட்டு வந்தால் மாடுகளை நோய்களிலிருந்து காப்பாற்றலாம். பாலில் நெய், பால் கோவா, பனீர் உற்பத்தி செய்து விற்பனையும் செய்கிறோம். நாட்டு மாட்டுப்பாலில் மதிப்புக்கூட்ட அனுபவமுள்ள விவசாயிகளுக்குப் பயிற்சியும் அளிக்கிறோம். இங்கு வந்து யார் வேண்டுமென்றாலும் அனுமதி பெற்று பண்ணையைப் பார்வையிடலாம்” என்று அழைப்புவிடுத்தார்.

 

Author


Hit Counter provided by technology news