108 அடி நீளம், 3,600 கிலோ எடை ‘அயோத்தியே மணக்கட்டும்!’ – பிரமாண்ட ஊதுவத்தியை காணிக்கை அளித்த பக்தர்

அயோத்தி ஸ்ரீராமர் கோயில் திறப்பு விழாவின்போது ஊர் எங்கும் நறுமணம் வீசிட, குஜராத்தைச் சேர்ந்த விவசாயி விஹாபாய் பர்வாத் என்பவர் மிக பிரமாண்டமான ஊதுபத்தியை வடிவமைத்துள்ளார்.

Published:Updated:
அயோத்தி ஸ்ரீராமர் கோயில் விழா

அயோத்தி ஸ்ரீராமர் கோயில் விழா

7Comments
Share

அயோத்தி எங்கும் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. நாடுமுழுவதும் இருந்து நடைபயணமாகவும் வாகனங்களிலும் குவிந்த வண்ணம் உள்ளனர் பக்தர்கள். பல கோடி மக்களின் பல நூற்றாண்டுக் கனவு ஸ்ரீராமர் கோயில். அதனால் பல வித்தியாசமான நேர்த்திக்கடன்களோடு இங்கு பக்தர்கள் கூடி வருகிறார்கள்.

1992-ல் ஸ்ரீராமர் கோயில் எழுப்பியே ஆக வேண்டும் என சங்கல்பம் செய்து கொண்ட பலரும் நீண்ட ஜடாமுடி வளர்த்தும், மௌன விரதம் இருந்தும் அயோத்தி வருவதைக் காண முடிகிறது.

அயோத்தி ஸ்ரீராமர் கோயில் விழா

அயோத்தி ஸ்ரீராமர் கோயில் விழா

அவர்களுள் மிகவும் பக்தர் ஒருவர் செய்த செயலே பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. பூஜைகளில் முக்கியமானது தூபம். தீபம் ஏற்றுவதற்கு முன்பே தூபம் அவசியம். அதிலும் ஸ்ரீராமரை ஆராதிக்கும் வழிபாடுகளில் முக்கியமானது அகர்பத்தி தூபம். மணக்கும் ஊதுபத்தி இல்லாமல் பூஜை நிறைவடைவது இல்லை. அயோத்தியில் 2024 ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ள ஸ்ரீராம ஜன்மபூமியில் நடைபெறும் ஸ்ரீராம பிராணப் பிரதிஷ்டை வைபவத்தில் ஸ்ரீராமருக்காக 3,600 கிலோ பிரமாண்ட ஊதுபத்தியை வடிவமைத்துக் காணிக்கையாக்கியுள்ளார் பக்தர் ஒருவர்.

அயோத்தி ஸ்ரீராமர்

அயோத்தி ஸ்ரீராமர்

அயோத்தி ஸ்ரீராமர் கோயில் திறப்பு விழாவின் போது ஊர் எங்கும் நறுமணம் வீசிட, குஜராத்தைச் சேர்ந்த விவசாயி விஹாபாய் பர்வாத் என்பவர் மிக பிரமாண்டமான ஊதுபத்தியை வடிவமைத்துள்ளார். ராமபக்தரான பர்வாத் இதனைக் கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தவுள்ளார். இதுகுறித்துப் பேசிய பர்வாத், ‘ராம பக்தரான நான் கடவுளுக்கு மிகப்பெரிய காணிக்கைச் செலுத்த விரும்பினேன். அதற்காகப் பெரிய அளவிலான ஊதுபத்தியைத் தயாரிக்கலாம் என முடிவு செய்தேன். குறிப்பிட்ட நாள்களுக்குள் இதைச் செய்ய முடியுமா என்ற கேள்வி எனக்குள்ளேயே இருந்தது. ஆனால் ஆறுமாத காலம் தனி ஆளாகச் செயல்பட்டு இந்த பிரம்மாண்ட ஊதுபத்தியைத் தயாரித்துவிட்டேன்.

108 அடி நீளம், 3,600 கிலோ எடை 'அயோத்தியே மணக்கட்டும்!' - பிரமாண்ட ஊதுவத்தியை காணிக்கை அளித்த பக்தர்

இந்த ஊதுபத்தி 108 அடி உயரமும், 3.5 அடி அகலமும், 3,600 கிலோ எடையும் கொண்டது. இது சுமார் 45 நாள்கள்வரை எரிந்து மணம் வீசும் தன்மை கொண்டது. இதைத் தயாரிக்க 376 கிலோ இயற்கை பசை, 376 கிலோ தேங்காய் மட்டைகள், 425 கிலோ வாசனை – மூலிகைப் பொருள்கள், 191 கிலோ நெய், 1,475 கிலோ பசுவின் சாணத்தூள், 280 கிலோ வாற்கோதுமை ஆகியவற்றை சேர்த்துத் தயாரித்தேன். இதற்காக ஐந்து லட்சம் ரூபாய்வரை செலவழித்துள்ளேன்’ என்று தெரிவித்தார்.

மேலும் ‘ஜனவரி 1-ம் தேதியே இந்த ஊதுவத்தியை வண்டியில் ஏற்றி, நானும் அயோத்தியை நோக்கிப் புறப்பட்டு‌விட்டேன். ஜனவரி 18-ம் தேதி அயோத்தியை அடைந்துவிடுவோம். எங்கள் ஸ்ரீராமன் பிரதிஷ்டை செய்யப்படும் நேரத்தில் இது மணம் வீசி எல்லோரையும் மயக்கும். என்னால் முடிந்த ஸ்ரீராம காணிக்கை இது. இவை அனைத்தும் ராம பிரானின் ஆசிர்வாத்தால் மட்டுமே சாத்தியமானது!’ என்றும் தெரிவித்துள்ளார்.

 

Author


Hit Counter provided by technology news