ஸ்ரீசக்ர ஹோமம்: உங்கள் வாழ்வுக்குத் தேவையான அத்தனை வளங்களையும் அளிக்கும் ஸ்ரீயோக மாயாதேவி வழிபாடு!

17-2-2024 திண்டுக்கல் செம்பட்டி அன்னை ஸ்ரீஆதிசக்தி கோயிலில் நடைபெறும் ஸ்ரீமகாவித்யா ஸ்ரீசக்ர ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் தோஷ நிவர்த்தி, குழந்தைப்பேறு, ஆரோக்கியம், ஆயுள்உள்ளிட்ட சகல நன்மைகளும் கிட்டும்

Published:Updated:
ஸ்ரீயோக மாயாதேவி

ஸ்ரீயோக மாயாதேவி

0Comments
Share

17-2-2024 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீஆதிசக்தி மங்களாம்பிகைதேவி கோயிலில் நடைபெறும் ஸ்ரீமகாவித்யா ஸ்ரீசக்ர ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் தோஷ நிவர்த்தி, குழந்தைப்பேறு, ஆரோக்கியம், ஆயுள், செல்வம், மணப்பேறு உள்ளிட்ட சகல நன்மைகளும் கிட்டும்.

ஸ்ரீயோக மாயாதேவி ஸ்ரீசக்ர ஹோமம்

ஸ்ரீயோக மாயாதேவி ஸ்ரீசக்ர ஹோமம்

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாக விளங்குபவள் அன்னை ஆதிபராசக்தி. வேதங்கள் போற்றும் வேதநாயகியாகவும், அனைத்து உயிரினங்களுக்கும் தாயாக விளங்குபவள் ஜெகன்மாதா. ஈரேழு பதினான்கு லோகங்களையும் அரசாட்சி செய்யும் இந்த அம்பிகை திண்டுக்கல் மாவட்டம், பச்சமலையான்கோட்டை கிராமம், செம்பட்டியில் யோக தவநிலை திருக்கோயிலில், ஸ்ரீயோகமாயாதேவி ஜீவமுக்தி பீடத்தில் அமர்ந்துள்ளாள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

அம்பிகையின் சக்தியே அனைத்துக்கும் ஆதாரம் என்று முன்னிறுத்துவதே சாக்த வழிபாடு. அன்னை ஸ்ரீமாதா க்ஷீர சாகரம் எனும் எல்லையில்லா பாற்கடலின் நடுவே, ஸ்ரீநகரம் எனும் ஸ்ரீசக்ரத்தின் நடுவே கற்பக விருட்சங்கள் சூழ, சிந்தாமணி க்ருஹத்தில் மந்த்ரிணி, வாராஹி, அஸ்வாரூடா உள்ளிட்ட பல சக்தி பரிவாரங்களுடன் அன்னை ஆதிபராசக்தியாக பஞ்ச ப்ரஹ்ம ஆசனத்தில் அமர்ந்து அகிலங்கள் அனைத்தையும் ஆட்சி செய்து வருகின்றாள் என்கின்றன வேதங்கள்.

அம்பிகையின் யந்திர வடிவமான ஸ்ரீசக்ர யந்திரத்தில் ஒவ்வொரு முக்கோணத்திலும் ஒவ்வொரு அம்பிகை அமர்ந்து அன்னை ஆதிபராசக்திக்கு சேவை புரிவார்கள். அதன் நடுவே, கோடி சூர்ய பிரகாசத்துடன், கோடி சந்திரர்களின் குளிர்ச்சியுடன், பக்தர்களை எப்பொழுதும் காத்துக்கொண்டிருக்கும் இமை மூடாத கண்களுடன் அன்னை வீற்றிருப்பாள். மாதுளைம்பூ நிறத்துடனும், பொன்னும், ரத்தினங்களும் ஆபரணங்களும் கொண்டு தேவி எழுந்தருளி இருப்பாள். அபய-வர கரமும், ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை அழிக்கும் வகையில் பாசாங்குசமும் கொண்டு அம்பிகை அருள்பாலிக்கின்றாள்.

செம்பட்டி யோக தவநிலை திருக்கோயில் ஸ்ரீயோக மாயாதேவி

செம்பட்டி யோக தவநிலை திருக்கோயில் ஸ்ரீயோக மாயாதேவி

அன்னை ஆதிபராசக்தியாக, ஸ்ரீஜகன்மாதாவாக, ஸ்ரீயோக மாயாதேவியாக கொலுவீற்றிருக்கும் ஒரே அற்புத, அதிசயக் கோயில் திண்டுக்கல் மாவட்டம், பச்சமலையான்கோட்டை கிராமம், செம்பட்டியில் அமைந்துள்ள, அன்னை ஜெகன்மாதாதேவி ஸ்ரீஆதிமகாசக்தி மங்களாம்பிகைதேவி யோக தவநிலை திருக்கோயிலே என்கிறார்கள் பக்தர்கள். இங்கு ஸ்ரீயோக மாயாதேவி ஜீவமுக்தி பீடத்தில், தேவாதிதேவர்களும், சித்தர்களும் போற்றும் ஸ்ரீமகாவித்யா ஸ்ரீசக்ரஹோமம் நடைபெறுவது வழக்கம். உலக உயிர்களின் வேண்டுதல்கள் யாவையும் நிறைவேற்றும் அற்புத வழிபாடு ஸ்ரீமகாவித்யா ஸ்ரீசக்ரஹோமம் என்கின்றன ஆன்மிக நூல்கள்.

யோக தவநிலை திருக்கோயில் ஸ்ரீயோக மாயாதேவி

யோக தவநிலை திருக்கோயில் ஸ்ரீயோக மாயாதேவி

வடக்கே உத்தராகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் உள்ளது புகழ்பெற்ற ஸ்ரீயோக மாயாதேவி ஆலயம். அதைப்போன்றே சிறப்புடனும் சாந்நியத்துடனும் திண்டுக்கல் செம்பட்டியில் ஸ்ரீயோக மாயாதேவி ஜீவமுக்தி பீட ஆலயமும் அமைந்துள்ளது. சர்வ மங்கலங்களும் அருளும் அன்னை ஸ்ரீஆதிபராசக்தி இங்கே அபூர்வ யோக தவநிலையில் வீற்றிருக்கிறாள். கருணை ததும்பும் இவள் திருக்கோலத்தைக் கண்டாலே குறைகள் யாவும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. இங்குள்ள ஸ்ரீயோகமாயாதேவி ஜீவமுக்தி பீடத்தில், ஆன்றோர்கள் போற்றும் அற்புத வழிபாடுகள் நடைபெற்ற வண்ணமே உள்ளன. இதில் முக்கியமானது ஸ்ரீமகாவித்யா ஸ்ரீசக்ர ஹோமம். இதில் கலந்து கொண்டு வேண்டிக் கொண்டால் காரிய ஸித்தியும் அன்னையின் கருணை கடாட்சமும் பெறலாம்.

17-2-2024 சனிக்கிழமை காலை வளர்பிறை அஷ்டமி கார்த்திகை நட்சத்திரம் கூடிய சுப வேளையில் காலை 10.30 மணிக்கு மேல் திண்டுக்கல் மாவட்டம், பச்சமலையான்கோட்டை கிராமம், செம்பட்டியில் அமைந்துள்ளது அன்னை ஜெகன்மாதாதேவி ஸ்ரீஆதிமகாசக்தி மங்களாம்பிகைதேவி கோயில். இந்த யோக தவநிலை திருக்கோயிலில் நடைபெறும் ஸ்ரீமகாவித்யா ஸ்ரீசக்ர ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் தோஷ நிவர்த்தி, குழந்தைப்பேறு, ஆரோக்கியம், ஆயுள், செல்வம், மணப்பேறு, புகழ் உள்ளிட்ட சகல நன்மைகளும் கிட்டும். நிம்மதியான வாழ்வு, உறவுப் பிரச்னைகள் அற்ற சூழல், சொத்து தொடர்பான தொல்லைகள் நீங்கும் என்கிறார்கள். செல்வவளம் பெருகவும், நிம்மதி கொண்ட நீண்ட வாழ்வு பெறவும் இந்த சிறப்பு மிக்க ஹோமம் நிச்சயம் அருளும் என்கிறார்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மரண பயம், எதிரிகளால் அச்சுறுத்தல், கடன் தொல்லையால் அவதி, எடுத்த காரியம் எதிலும் தடை, ஓயாத உடல்-மனப் பிரச்னைகள் கொண்டவர்கள் இந்த ஸ்ரீமகாவித்யா ஸ்ரீசக்ர ஹோமத்தில் கலந்து கொண்டால் நிச்சயம் பலன் அடைவார்கள்.

யோகா என்றால் உடலையும் மனதையும் ஒன்றிணைக்கும் நிலையான சக்தி. மாயா என்றால் மாறும் தன்மை கொண்ட உலக மாயை. இறைவியோடு இணைப்பதும் பிரிப்பதுமான சக்தி கொண்டவள் யோகமாயா தேவி. இரண்டுமே சராசரி மனிதர்களுக்குத் தேவையானவை என்கின்றன ஞான நூல்கள். இரண்டு பண்புகளையும் ஒருங்கே கொண்ட தேவி யோகா மாயசக்தி இங்கே தவநிலையில் குடிகொண்டு உங்கள் விருப்பங்களை நிறைவேற்றி உங்கள் வெறுப்புகளை அகற்றி அருள்பாலிக்கிறாள். இவளே பாகவத புராணத்தில் நாராயணி, விஷ்ணு துர்கை என்றும் போற்றப்படுகிறாள். பகவத் கீதையும் இவளைப் போற்றுகின்றது. விந்திய வாஸினி என்றும் இவளைப் புராணங்கள் தொழுகின்றன.

ஆதிபராசக்தி

ஆதிபராசக்தி

அன்னை ஆதிபராசக்தியை ஆராதிக்கும் வழிபாட்டில் இந்த ஸ்ரீசக்ர ஹோமம் சிறப்பானது. ஸ்ரீஆதிசங்கரர் தேசமெங்கும் சென்று ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்தே அம்பிகையின் ஆலயங்களை புனரமைத்தார். அவர் எழுதிய சௌந்தர்ய லஹரியும் ஸ்ரீசக்ர வழிபாட்டை வலியுறுத்தும்.

மங்கல வாழ்வும் மனையறம் விளங்கவும் உதவும் இந்த யாகத்தில் பங்கு கொள்ளுங்கள். தீர்க்க சுமங்கலியாக விளங்கவும் உங்கள் குலம் விளங்கவும், உங்கள் குலதெய்வம் யாரென்று தெரியாதவர்கள் இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள அடையாளம் காண்பர் என்பது நம்பிக்கை. ஆன்மிக அன்பர்கள் இந்த சிறப்பு ஹோமத்தில் கலந்து கொண்டு பலன் பெற வேண்டும், அவர்கள் எல்லாவித வளங்களையும் அடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

ஸ்ரீயோக மாயாதேவி

ஸ்ரீயோக மாயாதேவி

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம்+விபூதி+குங்குமம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

 

Author


Hit Counter provided by technology news