NIA: நாம் தமிழர் நிர்வாகிகள் வீட்டில் அடுத்தடுத்து ரெய்டு… பிப் 7-ம் தேதி ஆஜராக சம்மன்!

நாம் தமிழர் கட்சிக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி வருகிறதா… தடை செய்யப்பட்ட அமைப்போடு தொடர்பிருக்கிறதா… என்ற சந்தேகங்களின் அடிப்படையில் NIA ரெய்டு நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Published:Updated:
என்.ஐ.ஏ (NIA)

என்.ஐ.ஏ (NIA)

22Comments
Share

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இல்லத்தில் தேசிய புலனாய்வு முகமை (NIA) பிப்ரவரி 2-ம் தேதி காலை முதலே சோதனை நடத்தி வருவதாகவும் மேலும் சில நிர்வாகிகளுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்து விசாரித்தோம்.

சாட்டை துரைமுருகன்

சாட்டை துரைமுருகன்

நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர்களான சாட்டை துரைமுருகன் வீட்டில் ரெய்டும், இடும்பாவனம் கார்த்திக்கு சம்மனும் வழங்கியுள்ளது NIA. மேலும் சென்னை உள்ளிட்ட தென்மாவட்ட பகுதி நாம் தமிழர் நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் சோதனை நடத்தி அதிரடித்திருக்கிறது NIA. இதுகுறித்து நம்மிடம் பேசிய விபரமறிந்தவர்கள் “நாம் தமிழர் கட்சி விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை முன்னிறுத்தி அரசியல் செய்யும் இயக்கம். இந்தியாவில் தடை செய்யப்பட்ட அந்த அமைப்பிலிருந்து நாம் தமிழர் கட்சிக்கு தொடர்பா… மேலும் வெளிநாடுகளிலிருந்து நிதி வருகிறதா என்ற சந்தேகங்களின் அடிப்படையில் NIA ரெய்டு நடத்தியிருப்பதாக தெரிகிறது” என்றனர்.

திருச்சி வயலூர் சாலையிலுள்ள சண்முகா நகரில் சாட்டை துரைமுருகன் வீட்டில் காலை 5 மணிக்கு வந்த 4 அதிகாரிகள் 3 மணி நேரம் சோதனை மேற்கொண்டிருக்கிறார்கள். பின்னர் சம்மன் வழங்கிவிட்டு 8 மணிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் பலரை வருகின்ற பிப்ரவரி 7-ம் தேதி சென்னையிலுள்ள NIA அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் வழங்கியிருப்பதாக தெரிகிறது.

இடும்பாவனம் கார்த்திக்

இடும்பாவனம் கார்த்திக்

அதே போன்று தென்காசி மாவட்டம் சிவகிரியை அடுத்த ராயகிரியில் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த மாநில நிர்வாகி மதிவாணன் வீடு மற்றும் அவர் நடத்தி ஸ்டுடியோவில் NIA அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

NIA: நாம் தமிழர் நிர்வாகிகள் வீட்டில் அடுத்தடுத்து ரெய்டு... பிப் 7-ம் தேதி ஆஜராக சம்மன்!

நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் “நாம் தமிழர் கட்சி எந்த சமரசமுமின்றி பா.ஜ.க-வை எதிர்த்து அரசியல் செய்து வருகிறது. தி.மு.க உள்ளிட்ட கட்சிகளே விமர்சிக்க தயங்கும் விவகாரங்களை உடைத்து பேசுகிறது நாம் தமிழர். ஆகவே எங்களை அச்சுறுத்த முயல்கிறது மத்திய பா.ஜ.க. ரெய்டுக்கு வந்த அனைத்து அதிகாரிகளும் வெறும் கையோடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அச்சுறுத்தலுக்கெல்லாம் அஞ்சும் கட்சியல்ல நாம் தமிழர். சம்மன் குறித்து எங்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தலின்படி நடந்துகொள்வோம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

 

Author


Hit Counter provided by technology news