சிறீதரனுக்கு சுமந்திரன் விட்டுக் கொடுக்காவிட்டால் நிலைமை மோசமடைந்திருக்கும்

Ilankai Tamil Arasu KachchiM A SumanthiranS. Sritharan
 1 மணி நேரம் முன்

Join us on our WhatsApp Group

தமிழரசுக் கட்சியினுடைய தலைவர் தெரிவில் எம்.ஏ.சுமந்திரன், சி. சிறீதரனுக்கு விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் கட்சி சார்ந்த பிரச்சினையானது நீடித்திருக்கும் என கனடாவிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளை செயலாளர் வாவு வசந்தகுமார் சுட்டிக்காட்டினார்.

தமிழரசுக் கட்சியின் உள்ளக பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், கட்சியின் தற்போதையநிலை சார்ந்த விடயங்கள் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், சுமந்திரனின் செயற்பாடு குறித்து தான் கண்டித்ததாகவும், கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து பயணிக்குமாறு ஆலோசனை வழங்கியதாகவும் கூறினார்.

அத்தோடு, கட்சி சார்ந்த பதவிநிலையில் உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதை தவிர்க்கும் வகையிலான முறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி விவகாரத்திக் இழுபறியானது தொடரும் நிலையில், கட்சியின் உள்ளக பிரச்சினைகள் தொடர்பிலும், உறுப்பினர்களுடைய நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு…

 

செங்கடலில் ஆளில்லா விமானம் மூலம் சரக்கு கப்பல் மீது தாக்குதல்- செய்திகளின் தொகுப்பு

செங்கடலில் ஆளில்லா விமானம் மூலம் சரக்கு கப்பல் மீது தாக்குதல்- செய்திகளின் தொகுப்பு

 

 

இந்திய பிரதமரை விரைவில் சந்திக்கவுள்ள தமிழ் அரசியல் கட்சிகள்

இந்திய பிரதமரை விரைவில் சந்திக்கவுள்ள தமிழ் அரசியல் கட்சிகள்

 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
Author