8 ஆம் வகுப்பில் தோல்வி… நிறுவனத்தின் மதிப்பு ரூ 49698 கோடி: யாரிந்த சஞ்சய்

Money
 6 hours ago

Join us on our WhatsApp Group

இந்தியாவின் புதிய தலைமுறை பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர் சஞ்சய் அகர்வால். சிறிய நிதி நிறுவனமாக தொடங்கிய தனது நிறுவனத்தை வெறும் 20 ஆண்டுகளில் அறியப்படும் வங்கியாக மாற்றியவர்.

நம்பகமான நிறுவனத்தை உருவாக்கினார்

 

கல்லூரிப் படிப்பை முடித்த நிலையில் வணிக உலகில் நுழைந்து நம்பகமான நிறுவனத்தை உருவாக்கினார். சின்னதாய் நிதி நிறுவனமாக தொடங்கப்பட்ட நிறுவனம், தற்போது அதன் சந்தை மதிப்பு ரூ 49,698 கோடி என்றே தெரிய வந்துள்ளது.

8 ஆம் வகுப்பில் தோல்வி... நிறுவனத்தின் மதிப்பு ரூ 49698 கோடி: யாரிந்த சஞ்சய் | Failed In Class 8 Built Bank His Net Worth

 

AU வங்கியில் சஞ்சய் அகர்வால் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நிர்வாக இயக்குனராகவும் செயல்பட்டுள்ளார். 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியாத நிலையில், கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற தனது கனவைக் கைவிட வேண்டி வந்தது சிறுவன் சஞ்சய் அகர்வாலுக்கு.

பொறியாளரான அவரது தந்தை ராஜஸ்தான் மாநில மின்சார வாரியத்தை உருவாக்கியவர். தமது மகனின் நிலையை மேம்படுத்தும் முயற்சியில் 8 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த பிறகு கல்வியை ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற்றினார்.

 

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி... யார் பேரப்பிள்ளை பணக்காரர்

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி… யார் பேரப்பிள்ளை பணக்காரர்

 

 

அஜ்மீர் அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பிறகு CA பட்டம் பெற முயன்று இரண்டு முறை தேர்வில் தோல்வி கண்டார். இதனால் மன உளைச்சலுக்கும் ஆளானார். ஒருவழியாக CA தேர்வில் வெற்றியும் கண்டார்.

வங்கியாக மாற்றும் மிக முக்கிய முடிவு

 

தொடர்ந்து சொந்தமாக நிறுவனம் ஒன்றை நிறுவ முடிவு செய்த சஞ்சய், தமது நிதி நிறுவனத்திற்கு முதலீடு ஈர்க்கும் பொருட்டு கார்களை வாடகைக்கு விட்டு, பெயரளவிலான கட்டணத்தை வாடகையாக வசூலிக்கத் தொடங்கினார்.

8 ஆம் வகுப்பில் தோல்வி... நிறுவனத்தின் மதிப்பு ரூ 49698 கோடி: யாரிந்த சஞ்சய் | Failed In Class 8 Built Bank His Net Worth

 

2002ல் HDFC வங்கியுடன் இணைந்து செயல்படவும் வாய்ப்புகள் பெற்றார். 2017ல் தமது நிதி நிறுவனத்தை வங்கியாக மாற்றும் மிக முக்கிய முடிவுக்கு வந்தார். தற்போது ஜெய்ப்பூரில் இருந்து செயல்படும் AU வங்கியானது 30 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

நாடு முழுவதும் 1,000 பகுதிகளில் இருந்து AU வங்கி செயல்படுகிறது. 2023ல் சஞ்சய் அகர்வாலின் தோராயமான சொத்து மதிப்பு என்பது ரூ 10,026 கோடி என்றே தெரிய வந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
Author