பொருளாதார நெருக்கடியின் போது ஜனாதிபதி பதவியை ஏற்க மறுத்த சஜித் : மனுஷ குற்றச்சாட்டு

Manusha NanayakkaraSajith Premadasa
 6 hours ago

Independent Writer

Independent Writer

in அரசியல்

Join us on our WhatsApp Group

Courtesy: Ministry of Labour & foreign Emp

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் போராட்டத்தினால் நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் போது, நாம் சஜித் பிரேமதாசவிடம் நாட்டை பொறுப்பேற்குமாறு கூறினோம் ஆனால் ஜனாதிபதி நாற்காலியில் அமர முடியாதென கூறி அந்த பொறுப்பில் இருந்து அவர் நழுவிச் சென்றுவிட்டார் என மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

 

ஜனாதிபதி வேட்பாளர்களின் பதவிகளுக்கு காத்திருக்கும் சிக்கல்

ஜனாதிபதி வேட்பாளர்களின் பதவிகளுக்கு காத்திருக்கும் சிக்கல்

 

12 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அச்சமின்றி, தூரநோக்குடன் சவால்களைப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணிலின் அரசுடன் நாம் மக்களின் உயிரைக் காப்பாற்ற இணைந்து கொண்டோம்.

நாடு வீழ்ந்த இடத்தில் இருந்து இரண்டு வருடங்களில் எங்களால் நாட்டை கட்டியெழுப்ப முடிந்துள்ளது. ஹரின் சுற்றுலாத்துறை மூலம் நாட்டுக்கு டொலர்களை கொண்டுவந்தார்.

 

பொருளாதார நெருக்கடியின் போது ஜனாதிபதி பதவியை ஏற்க மறுத்த சஜித் : மனுஷ குற்றச்சாட்டு | Sajith Refused To Accept The Post Of President

என்னால் வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலார்கள் மூலம் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்டு வர முடிந்தது. இதனால் தான் மக்களுக்கு எரிபொருள், எரிவாயு, மருந்து மற்றும் மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்க முடிந்தது.

இதன் காரணமாகவே நாட்டின் தொழில்துறைகளை கட்டியெழுப்பி பொருளாதாரத்தை வலுப்படுத்த முடிந்தது. அன்று நாம் ஏற்றுக்கொண்ட பொறுப்பை இன்று சரிவர நிறைவேற்றிவிட்டு அச்சமின்றி வெளியே செல்கிறோம். எமது இரண்டு வருட கடின சேவை நமது வரலாற்றில் எழுதப்படும்.

எனக்கு வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வாக்காளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழர்களின் கோரிக்கைகளை அங்கீகரிக்க வைக்கவே பகிஷ்கரிப்பு ஆயுதம் : செல்வராஜா கஜேந்திரன்

தமிழர்களின் கோரிக்கைகளை அங்கீகரிக்க வைக்கவே பகிஷ்கரிப்பு ஆயுதம் : செல்வராஜா கஜேந்திரன்

 

 

பங்களாதேஷ் இடைக்கால அரசுக்கு அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை

பங்களாதேஷ் இடைக்கால அரசுக்கு அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை

 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
Author