தமிழரசுக் கட்சி தலைவர் தெரிவில் நடந்த பெரும் சூழ்ச்சி! காலம் கடந்து அம்பலம்

JaffnaTrincomaleeIlankai Tamil Arasu KachchiM A SumanthiranS Shritharan
 5 hours ago

Join us on our WhatsApp Group

பொதுச் செயலாளர் பதவி என்பது விட்டுக் கொடுப்புடன் அனைவரையும் அரவணைத்து ஒன்றாக இணைத்துச் செல்லும் ஒரு பதவி. ஆனால் தமிழரசுக் கட்சிக்குள் அந்த பதவி இன்று டம்மியான புல்லுருவிகளால் நாசமாக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வைத்தியருமான சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவின் போது பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம் சுகயீனம் காரணமாக அதில் கலந்து கொள்ளவில்லை என்று அறிவித்திருந்தார். ஆனால், அந்த சமயத்தில் அவர் உண்மையிலேயே வைத்தியசாலையில் இருந்தாரா, எங்கு சிகிச்சைப் பெற்றார் என்பதை அவரால் தௌவுப்படுத்த முடியுமா எனவும் சிவமோகன் சவால் விடுத்துள்ளார்.

 

அவசரநிலைக்கு தயாராகும் இலங்கை விமானப்படை

அவசரநிலைக்கு தயாராகும் இலங்கை விமானப்படை

 

நாசமாக்கப்பட்டுள்ள கட்சி

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பொதுச்செயலாளர் பதவி என்பது விட்டுக்கொடுப்புடன் அனைவரையும் அரவணைத்து ஒன்றாக இணைத்துச் செல்லும் ஒரு பதவி. தமிழரசுக்கட்சியின் தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றோர் இந்தப்பதவியினூடாக தங்களுக்குள்ளேயே விட்டுக் கொடுத்து செயற்பட்டிருந்தனர். ஆனால் அந்த பதவி இன்று டம்மியான புல்லுருவிகளால் நாசமாக்கப்பட்டுள்ளது.

இன்று கட்சியானது சரியான தீர்மானம் எடுக்க முடியாமல் வழக்கில் சிக்கியுள்ளது. எதனால் அது? கட்சியின் மாநாடு நடப்பதற்கு முன்னர் அல்லது பொதுக்குழு கூடுவதற்கு முன்னர் ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடாத்தப்படவேண்டும். அந்த கூட்டத்தில் தான் பிரச்சினைகள் இல்லாமல் பொதுக்குழுவை எப்படி வழிநடத்துவது என்று தீர்மானிப்பது.

பதவிகளில் யாரை போடலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்வதும் அந்த கூட்டதிலேயே. அதுவே ஆலோசனைக் குழுவின் பணி. அந்தக்கூட்டம் வாக்கெடுப்பிற்கு முதள்நாள் திருகோணமையில் நடப்பதாக இருந்தது. நாங்கள் அதற்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் போது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அந்தக்கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சத்தியலிங்கத்திற்கு சவால்

சத்தியலிங்கம் ஐயா நிமோனியாவாலோ கோவிட்டாலோ வைத்தியசாலையில் இருக்கிறார் என்றார்கள். அதனால் கூட்டம் ரத்தாகியது. அந்த பதில் செயலாளர் உண்மையில் சுகவீனமுற்றுத்தான் கூட்டத்திற்கு வரவில்லை என்றால் அவர் எந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரின் விபரங்களை தரவேண்டும்.

தமிழரசுக் கட்சி தலைவர் தெரிவில் நடந்த பெரும் சூழ்ச்சி! காலம் கடந்து அம்பலம் | Ilangai Tamil Arasu Katchi Current Issue

ஊடகங்களுக்குப் பொறுப்பு உள்ளது நீங்கள் போய் அவரிடம் கேட்டுபாருங்கள். மக்களுக்கு அதனை வெளிப்படுத்தவேண்டும். அப்படி இல்லாது விடில் இது நடத்தப்பட்ட சூழ்ச்சி. அந்த சூழ்ச்சியினாலேயே அந்த தெரிவுகள் போட்டிக்கு சென்றது. பின்னர் நிர்மூலமாக்கப்பட்டது.

செயலாளரும், பேச்சாளரும் விலகினால்தான் விடிவு எனவே பதில்செயலாளர் சகல பொறுப்புக்களையும் ஏற்று கட்சியினை உருக்குலைத்ததையும் ஏற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும். அடுத்தது ஊடகப்பேச்சாளராக ஒருவர் இருப்பதாக இருந்தால் கட்சி எழுதிக்கொடுப்பதை மாத்திரமே சொல்லவேணும். தனிப்பட்ட கருத்தை அவர் சொல்லமுடியாது.

ஊடக பேச்சாளர் அந்த தர்மத்தை மீறியபடியால் அவரும் நீக்கப்படவேண்டும். நாம் பயந்தவர்கள் அல்ல. கடசிவரை தமிழரசுக்கட்சிக்கு உள்ளே இருந்து குரல் கொடுப்போம். உயிர் இருக்கும்வரை தமிழரசுக்கட்சியோடு தான் பயணிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

 

 

தராகி சிவராமின் மரணம் உட்பட்ட ஏழு முக்கிய சம்பவங்களின் விசாரணைகள் ஆரம்பம்

தராகி சிவராமின் மரணம் உட்பட்ட ஏழு முக்கிய சம்பவங்களின் விசாரணைகள் ஆரம்பம்

Author