நடுரோட்டில் தமிழரசுக்கட்சிக்கு நேர்ந்த கதி: கடும் ஆதங்கத்தில் பொதுமகன்

Ilankai Tamil Arasu KachchiM A SumanthiranMavai SenathirajahS Shritharan
 5 hours ago

Join us on our WhatsApp Group

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழர் தரப்பில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமை பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்குமாறும் சிவஞானம் சிறீதரனுக்கு மாவை சேனாதிராஜா கடிதம் அனுப்பியிருந்தார்.

இதனையடுத்து  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக அதன் கொழும்பு கிளைத் தலைவரும் சட்டத்தரணியுமான கே.வி. தவராசா அறிவித்திருந்தார்.

கட்சியில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், தனிநபர்களின் தன்னிச்சையான போக்குக்குள் சிக்குண்டுள்ள தமிழரசு கட்சியுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்றும் பதவி விலகலுக்கான காரணத்தையும் வெளியிட்டிருந்தார்.

இருப்பினும், தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனையவர்களின் பதவி விலகல் கடிதங்கள் எவையும் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என்று கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்திருந்தார்.

இந்த தொடர் பதவி விலகல்கள் தமிழர் தரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழரசுக்கட்சியின் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் பதவி விலகியுள்ளதாக சட்டத்தரணி கே.வி. தவராசாவிடம் பொதுமகன் ஒருவர் நடுவீதியில் வைத்து கடும் ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழரசுக்கட்சிக்குள் கொண்டுவரப்பட்ட சுமந்திரன் போன்றோரால் கட்சி கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும், கட்சியை பற்றி சிந்திக்காது கட்சியின் மீதே வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.

 

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான டொலர்கள்! அநுர தரப்பின் அறிவிப்பு

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான டொலர்கள்! அநுர தரப்பின் அறிவிப்பு

 

 

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

 

 

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Author